16.10.07

சட்டென நனைந்தது நெஞ்சம்

படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
வரிகள் வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் :
நடிப்பு: மாதவன், சிம்ரன்

இந்த பாடல் குறுந்தகட்டிலோ, ஒலிப்பதிவு நாடாவிலோ வரவில்லை
சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

உடலுக்குள் மல்லிகை
த் தூல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்

என்று காத்துக் கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்

என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன்

சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று

இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு துடைத்தெடு

வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று

அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு

வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று

அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

சட்டென நனைந்தது நெஞ்சம்!

5 comments:

sangeetha said...

hi...these lyrics are amazing..do u know where i can listen the song?

Chandravathanaa said...

சங்கீதா,
இந்த இணைப்பில் கேளுங்கள்.
http://mailtoviki.googlepages.com/Sattena_nenaindhadhu_nenjam.mp3

Thursday, January 10, 2008 4:58:00 AM

sangeetha said...

thank you soo much..the song is nice too...i think i am gonna be addicted to it for awhile...ur blog is amazing...

கருப்பன்/Karuppan said...

//
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன்
சல்லி வேர்கள் இருந்தேன்
//
இருந்தேன் அல்ல அது அறுந்தேன்!

Chandravathanaa said...

நன்றி கருப்பன்.
மாற்றி விட்டேன்