31.5.05

உனக்கென இருப்பேன்

படம்: காதல்
பாடல்: உனக்கென இருப்பேன்
பாடியவர்: ஹரி சரண்
பாடல் வரிகள்:நா.முத்துக்குமார்


உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே...! பெண்மணியே..!
அழுவதேன்... கண்மணியே..!
வழித்துணை நான் இருக்க,

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்

கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்
கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்றுதான் வண்ணத்திப்பூச்சிகள் பார்த்திடுமா?

மின்சார கம்பிகள் மீது
மைனாக்கள் கூடு கட்டும்.
நம் காதல் தடைகளை தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை.
வரும் காலம் காயம் ஆற்றும்
நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளி கொடுக்கும்

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்
தோழியே..! இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

வெந்நீரில் நீ குளிக்க
விறகாகித் தீ குளிப்பேன்,
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்
விழிமூடும்போது முன்னே
பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்
நான் என்றால் நானேயில்லை
நீதானே நானாய் ஆவேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே...! பெண்மணியே..!
அழுவதேன்... கண்மணியே..!
வழித்துணை நான் இருக்க..
வழித்துணை நான் இருக்க..

13.5.05

வாழ நினைத்தால் வாழலாம்

வரிகள் - கண்ணதாசன்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

(வாழ)

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

(வாழ)

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்

(வாழ)

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்

(வாழ)

11.5.05

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

படம் - அபூர்வராகங்கள்
பாடியவர் - வாணி ஜெயராம்
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்


ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)