1.11.07

சுட்டும் விழிச் சுடரே

படம் : கஜினி
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹரிஸ் ஜெயராஜ்


பல்லவி
======
ஆ: சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே
என் உலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண் விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண் விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச் சுடரே ...)

சரணம் - 1
=========
ஆ: மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
பெ: தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
ஆ: கருப்பு வெள்ளைப் பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் (உன் கண்கள்)
பெ: சுட்டும் விழிச் சுடரே..

சரணம் - 2
==========
பெ: மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
ஆ: தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
பெ: மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு (கண்ணாலே)
ஆ: சுட்டும் விழிச் சுடரே......

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

படம் : சென்னை 600028
பாடியவர்கள் : எஸ்.பி.பி. சரண், வெங்கட்பிரபு
இசை : யுவன்ஷங்கர்ராஜா
இயக்கம் : வெங்கட்பிரபு


பல்லவி
=======
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது
உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்
உப்பில்லாமல் என்னாகும்
உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்)

சரணம்-1
=========
WarShip என்றும் நீரில் ஓடும்
SpaceShip என்றும் வானில் ஓடும்
FriendShip ஒன்று தான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஓஹோஹோஹோ
FriendShip என்றும் தெய்வம் என்று
Worship செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயிலாகுமே
ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல்கொண்டு வாழ்கின்றோம்
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்யக் கூடாது
நண்பா வா.. ஹே (யாரோ யாருக்குள்)

சரணம்-2
=========
எங்கும் திரியும் இளமைத்தீவே
என்றும் எரியும் இனிமைத்தீயே
தண்ணீர் அவிக்குமா வீசும் காற்று அணைக்குமா
என்னைக் கண்டா தன்னந்தனியா
எட்டிப் போகும் சிக்கன்குனியா
எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம்
நாட்டிலுள்ள கூட்டணி போல்
நாங்கள் மாற மாட்டோமே
நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீற மாட்டோமே
நண்பா வா ஹே.. (யாரோ யாருக்குள்)

இந்த நிமிடம் இந்த நிமிடம்

படம்: பள்ளிக்கூடம்
பாடியவர்: ஸ்ரீனிவாஸ், ஜனனி
இசை: பரத்வாஜ்
இய‌க்குநனர்: த‌ங்க‌ர்ப‌ச்சான்,



பல்லவி
=======

ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
(இந்த நிமிடம்)
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா

பெ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நீளாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா

சரணம்‍‍‍‍‍ 1
========

ஆ: ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
பெ: ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
ஆ: இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே
பெ: ஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ
ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம்...


சரணம் 2
========

ஆ: கிழ‌க்கும் மேற்கும் வ‌ட‌க்கும் தெற்கும்
ம‌னித‌ன் வ‌குத்த‌ திசையாகும்
உன்முக‌ம் இருக்கும் திசையே எந்த‌ன்
க‌ண்க‌ள் பார்க்கும் திசையாகும்
பெ: கோடையும் வாடையும் இலையுதிர் கால‌மும்
இய‌ற்கை வ‌குத்த‌ நெறியாகும்
உன்னுட‌ம் இருக்கும் கால‌த்தில் தானே
எந்த‌ன் நாட்க‌ள் உருவாகும்
ஆ: உந்த‌ன் நிழ‌ல‌ருகே ஓய்வுக‌ள் எடுத்திடுவேன்
இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
பெ: ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ


பெ: இந்த‌ நிமிட‌ம் இந்த‌ நிமிட‌ம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
ஆ: இந்த‌ மெள‌ன‌ம் இந்த‌ மெள‌ன‌ம் இப்ப‌டியே உடையாதா
இந்த‌ ம‌ய‌க்க‌ம் இந்த‌ ம‌ய‌க்க‌ம் இப்ப‌டியே நீளாதா