7.5.06

மேகத்தைத் தூது விட்டா

படம் : அச்சமில்லை அச்சமில்லை
குரல் : மலேஷியா வாசுதேவன், சுசீலா
பாடல் : வைரமுத்து
இசை : வி.எஸ். நரசிம்மன்
நடிகர்கள் : ராஜேஷ், சரிதா

சுசீலா :
மேகத்தைத் தூது விட்டா
திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே..
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம
எப்ப வந்து தரப்போற ?
எப்ப வந்து தரப்போற ?

ஓடுகிற தண்ணியிலே...
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ...?

ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ

செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே

மலேஷியா வாசுதேவன்:
அடி கிராமத்துக் கிளியே - என்
கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு
கொடை புடிக்க வா மயிலே

சுசீலா :
கொடையுமில்ல படையுமில்ல
கூதலுக்கு ஆதரவா
தாவணிய நீ புழிய
தலை துவட்ட நான் வரவா ?

மலேஷியா வாசுதேவன்:
நீ நனச்ச ஆடையெல்லாம்
நீ புழிஞ்சா நீர் வடியும்
அயித்த மகன் நான் புழிஞ்சா
அத்தனையும் தேன் வடியும்

சுசீலா :
ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

மலைத் தோட்டத்து குயிலு
இது உமக்காகப் பாடுதுங்க
ஆசையை நான் தூது விட
அருவி ஒரு பாலமுங்க

மலேஷியா வாசுதேவன்:
அருவி போல அழுகிறேனே
அறிந்து கொண்டால் ஆகாதோ
முந்தானையின் ஓரம் என்னை
முடிந்து கொண்டால் தாளாதோ

சுசீலா :
வக்கணையா தாலி வாங்கி
வாசலுக்கு வாரதெப்போ - ஒங்க
பாதம் பட்ட மண்ணெடுத்து நான்
பல்லு வெளக்கப் போறதெப்போ

ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே

நிலவே நீ சாட்சி..

படம் : நிலவே நீ சாட்சி
குரல் : பி.சுசீலா
நடிகை : கே.ஆர்.விஜயா

நிலவே நீ சாட்சி..
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி..

( நிலவே )

அலையும் உறங்க முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன

( நிலவே )

ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு

( நிலவே )

கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை

( நிலவே )