24.5.06

பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும்

படம் : பெண்ணே நீ வாழ்க
குரல் : ´TMS+சுசீலா
இசை :
நடிகர்கள் : ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா

பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)

மங்கையரைப் பார்த்ததுண்டு
மனதைக் கொடுத்ததில்லை
மலர்களைப் பார்த்ததுண்டு
மாலையாய்த் தொடுத்ததில்லை
மணக்கோலம் பார்த்ததுண்டு
மாப்பிள்ளையாய் ஆனதில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)

தெய்வம் ஒரு சாட்சி என்றால்
நேரிலே வருவதில்லை
பிள்ளை மறு சாட்சி என்றால்
பேசவே தெரியவில்லை
யாரைச் சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)

உன் வீட்டுத் தோட்டத்திலே
ஒரு மரம் தனி மரமாம்
தனி மரம் தவிக்கக் கண்டு
தளிர்க் கொடி தழுவியதாம்
ஒன்றுக்கொன்று மாலையிட்டு
அன்று முதல் பழகியதாம்
பழகிய பழக்கத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)