28.8.06

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

படம்: அருணோதயம்
பாடியவர்: T.M.சௌந்தரராஜன்
இசை: K.V.மகாதேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்


உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
உனக்கு நீதான் நீதிபதி..
மனிதன் எதையோ பேசட்டுமே..
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி..

(உலகம் ஆயிரம்)

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..
குணத்துக்கு தேவை மனசாட்சி..

(உலகம் ஆயிரம்)

மயிலைப் பார்த்து கரடியென்பான்..
மானைப் பார்த்து வேங்கையென்பான்..
குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்..
அதையும் சில பேர் உண்மையென்பார்..
யானையைப் பார்த்த குருடனைப் போல்..
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கடலில் விழுந்த நன்பனுக்கு..
கைகொடுத்தேன் அவன் கரையேற..
கரைக்கு அவனும் வந்து விட்டான்..
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்..
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்..
சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை..

(உலகம் ஆயிரம்)