16.10.07

நானொரு சிந்து காவடிச்சிந்து

படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : சித்ரா


நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்

சொந்தமெதுவுமில்லை
அதச் சொல்லத்தெரியவில்லை

(நானொரு சிந்து...)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு
விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு
கண்டுபிடி........

(நானொரு சிந்து...)

பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே
தலையெழுத்தென்ன? என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்...

(நானொரு சிந்து...)

பிடிக்கும் உனை பிடிக்கும்

படம் : ஆழ்வார் (2006)
இசை : சிறீகாந்த், தேவா
இயக்கம் : செல்லா
பாடியவர்கள் : மதுஷ்ரி
நடிப்பு : அஜித்,அஸின்

பிடிக்கும் உனை பிடிக்கும்
அழகா உனைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும்
ரொம்பப் பிடிக்கும்

(பிடிக்கும்)

அழகாய் இருப்பாய் எனக்குப் பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகுக்குப் பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்குப் பிடிக்கம்
அழகா உன் தமிழை உலகுக்குப் பிடிக்கும்

(பிடிக்கும்)

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்
ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தைப் பிடிக்கும்
ரேஸ்காரைப் போன்ற உன் வேகத்தைப் பிடிக்கும்

தந்தம் போல் இருக்கும் உன் தோளைப் பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடம் உன் மார்பைப் பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்

சின்னப் பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாட நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும்

(பிடிக்கும்)

சட்டென நனைந்தது நெஞ்சம்

படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
வரிகள் வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் :
நடிப்பு: மாதவன், சிம்ரன்

இந்த பாடல் குறுந்தகட்டிலோ, ஒலிப்பதிவு நாடாவிலோ வரவில்லை
சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

உடலுக்குள் மல்லிகை
த் தூல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்

என்று காத்துக் கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்

என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன்

சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று

இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு துடைத்தெடு

வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று

அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு

வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று

அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

சட்டென நனைந்தது நெஞ்சம்!