24.3.05

வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு

படம்-விக்ரமாதித்தன்
பாடியவர்-பி.சுசீலா
வரிகள்- கண்ணதாசன்

வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு
சொன்தை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு

உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு
உயிரங்கே உடலிங்கே உள்ளதென்றும் சொல்லு
உயிரிழந்து மகிழ்விழந்து உருகுவதாய்ச் சொல்லு
உடலிழந்து போகுமுன்னே ஓடி வரவும் சொல்லு

ஆடுமயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு
அழகுநிலா சிரிக்கவில்லை என்பதையும் சொல்லு
வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு - நான்
வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு

வருவதற்குள் நீ விரைந்து வந்து பதில் சொல்லு