31.5.09

நாளைப் பொழுது உந்தன்

படம்: பொற்சிலை
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா
நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த
ஜாதியும் இரண்டேயடா தலைவன் நீதியும் ஒன்றேயடா

நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
சத்திய சோதனையை சகித்துக் கொண்டே இருந்தால்
வெற்றியைக் காண்பாயடா அதுவே வேதத்தின் முடிவாமடா

நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா இறைவன்
நம்பிக்கை தருவானடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

15.5.09

புன்னகையில் கோடி பூங்கவிதை

புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண் நிலவு இரண்டு உலகில் கிடையாது

ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ

வானில் தோன்றும் மாலை சிவப்பு
வானில் தோன்றும் மாலை சிவப்பு
விழிகளில் பாதி விரல்களில் பாதி
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு
நேர் வந்து நின்றது கொடி ஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ

நிலவென்ன நெருப்பென்ன
உலவும் பேரழகே
உனக்குள்ளே முள்ளோ மாமலரோ
என மயக்கம் பிறக்குதடி
எனக்குள்ளே என்னென்று ஏதென்று
இனங்கான வடிவத்தை
பெண்ணென்று பார்த்த மனம்
பித்தாகி போனதம்மா

பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை
பாவை இனங்களும் அது போல
நாம் பழகி பார்க்கையில் மதுபோலே

ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ

நீங்க நல்லா இருக்கோணும்

படம் - இதயக்கனி

நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாடுங்கள்

நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
பாடுபட்டு சேர்த்த பொருளை
கொடுக்கும் போது இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை
பார்க்கும் போது இன்பம்
பேராசையால் வந்த துன்பம்
சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில்
அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற

காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே

நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற

நதியை போல நாமும்
நடந்து பயன் தர வேண்டும்
கடலை போல விரிந்த
இதயம் இருந்திட வேண்டும்
வானம் போல பிறருக்காக
அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில்
என்றும் விளங்கிட வேண்டும்

நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற

ஏரிக்கரை ஓரத்திலே எட்டு

படம் - தாழம்பூ

ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும்
என்ன வைத்தால் தோப்பாகும்
வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்

(ஏரி)

தென்புறத்துச் சீமையிலே
தென் குமரிக் கடல் இருக்கு
குமரிக் கடல் மூழ்கி வந்தால்
கோடையிலே என்ன வரும்
சரம் சரமாய் முத்து வரும்
தனிப்பவளம் சேர்ந்து வரும்
குமரியுடன் கலந்து விட்டால்
குடும்பத்திலும் ஆசை வரும்

(ஏரி)

காலம் இன்று கனியும் என்று
கனவு கண்டு வந்து விட்டேன்
கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ
நினைத்து விட்டால் நடக்காதோ
நெருங்கி விட்டால் பிறக்காதோ
மனத்தினிலே முடித்து விட்டால்
வழிக்கதவும் திறக்காதோ

(ஏரி)

பங்குனி மாதத்தில் ஓரிரவு

படம் - தாழம்பூ

பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால் போல் சிரித்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு
அங்கு தனியே தவித்தது பெண்ணழகு
பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால் போல் சிரித்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு
அங்கு தனியே தவித்தது பெண்ணழகு
பங்குனி மாதத்தில் ஓரிரவு

காதல் தலைவன் வரவில்லையாம்
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்
காதல் தலைவன் வரவில்லையாம்
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்
தூது விட்டாலும் பதில் இல்லையாம்
அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்
அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்
மல்லிகை மலரை நெருப்பென்றாள்
வரும் மணியோசை தனை இடி என்றாள்
மல்லிகை மலரை நெருப்பென்றாள்
வரும் மணியோசை தனை இடி என்றாள்
மெல்லிய பனியை மழை என்றாள்
தன் மேனியையே வெறும் கூடென்றாள்

பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால் போல் சிரித்தது வெண்ணிலவு

காலடி ஓசை கேட்டு விட்டாள்
அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்
காலடி ஓசை கேட்டு விட்டாள்
அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்
நாலடி நடந்தாள் முன்னாலே
அங்கு நடந்தது என்னவோ பின்னாலே

பங்குனி மாதத்தில் ஓரிரவு

தாழம் பூவின் நறு மணத்தில்

படம் - தாழம்பூ

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும்தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
அது ஒரு நாள் வந்து பதில் அளிக்கும்

ஓஹோ ஓஓஓஓ

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
குல மகள் நாணம் புரிந்து விடும்
குல மகள் நாணம் புரிந்து விடும்
மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும்
ஓஹோ ..ஓஓஓஓஓ

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும்தரம் இருக்கும்

கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்
கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்
கடமையும் காதலும் நிறைவேறும்
கடமையும் காதலும் நிறைவேறும்
அந்தக் காலமும் விரைவில் உருவாகும்

ஓஹோ..ஓஓஓஓ
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

தூவானம் இது தூவானம்

திரைப்படம் - தாழம்பூ

தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டுச் சொட்டா உதிருது உதிருது
அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது


(தூவானம்)

பூவாடும் இளம் கூந்தலுக்குள்

புகுந்து புகுந்து ஓடுது
மேலாடைதனில் மழை விழுந்து
நனைந்து நனைந்து மூடுது
மானோடும் சிறுவிழியில்

இட்டமையும் கரைந்து ஓடுது
தேனோடும் இதழ் மீது வந்து
பனித்துளி போல் தேங்குது


(தூவானம்)

உட்காரச் சொல்லி நான் அழைக்கும்போது
ஓட்டம் என்ன முன்னாலே
என் பக்கா மனசை இந்த வெட்கமும் வந்து
பாய்ந்திழுக்குது பின்னாலே
தக்க நேரம் வந்து விட்டது
தையல் போடு கண்ணாலே
இந்த சரசமாடக் கூடாது
ஒருதாலி கட்டும் முன்னாலே


(தூவானம்)

எங்கே போய்விடும் காலம்

திரைப்படம் - தாழம்பூ

எங்கே போய்விடும் காலம்?
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தைத் திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்

உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.

ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்

கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் எனக் கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்