28.6.06

நான் உள்ளதைச் சொல்லட்டுமா

படம் : வசந்த ராகம்
குரல் : ஜேசுதாஸ், சுரேந்தர், சுசீலா
பாடல் : வாலி
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : விஜய்காந்த், ரஹ்மான், சுதா சந்திரன்


நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்
பொன்மகளும் மன்னவனும் பெருவாழ்வு காணவேண்டும்
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

கூடுகட்டி வைத்திருந்தேன் குருவியோடு வாழ்ந்திருந்தேன்
நாடு விட்டு வந்தபோது நானொருவன் பிழைத்து வந்தேன்
பேதை முகம் காணவில்லை தேடி ஓடக் காலுமில்லை
கண்ணெதிரில் பார்த்தபோது கையணைக்க உரிமையில்லை
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

வீணையொன்று கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்
வேறொருத்தன் சொந்தமென்று மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்
இன்று வரை தொட்டதில்லை கைவிரலும் பட்டதில்லை
இன்னொருவன் வீணை இது சுதிலயம்தான் கெட்டதில்லை
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

என்னுடைய வானத்திலே இருட்டிய நேரத்திலே
வெண்ணிலவைக் காணவில்லை விடிவிளக்கை ஏற்றி வைத்தேன்
விளக்கேற்றி வைத்தவுடன் வெண்ணிலவும் வந்ததம்மா
வெண்ணிலாவைக் கண்டவுடன் பெண்ணிலாவும் தவித்ததம்மா

நிலவே வந்ததென்று நெய்விளக்கை அணைப்பேனா
நெய்விளக்கு போதுமென்று நிலவைத்தான் வெறுப்பேனா
இருகரை நடுவினிலே நதி போல் ஓடுகிறேன்
விடுகதை நானாகி விடையைத்தான் தேடுகிறேன்
இறைவா... என் இறைவா..
இதற்கொரு பதிலைச் சொல் இறைவா..

நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் சூழ வேண்டும்
பொன்மகளும் மன்னவனும் நிம்மதியைக் காணவேண்டும்
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..