15.11.04

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே!

படம் - காஞ்சித்தலைவன்
பாடல்வரிகள் - மு.கருணாநிதி
பாடியவர்- சி.எஸ்.ஜெயராமன் குழுவினருடன்

வெல்க நாடு வெல்க நாடு
வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு
செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே

தாயின் ஆணை கேட்பதுக்கு
தலை வணங்கும் தங்கமே
தலை கொடுத்து தாயின் மானம்
காத்திடுவாய் சிங்கமே
சென்று வா வென்று வா

குழலைப் போலை மழலை பேசும்
குழந்தைகளின் முத்தம்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்
கோல மொழி சத்தம்
உன் குன்று தோளில் புது பலத்தை
வளங்குமடா நித்தம்
சென்று வா வென்று வா

மகிமை கொண்ட மண்ணின் மீது
எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்பதில்லையடா
வீரர்களின் கைகள்
மாவீரர்களின் கைகள்
சென்று வா வென்று வா

ஓங்கிய வாள் போன்ற வடிவமடா - அவர்
ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
வேங்கைப் புலி மன்னனடா
வீரர்களின் தலைவனடா - அவர்
கட்டளைக்குக் காத்திருக்கும் வல்லவனே
களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே