20.8.05

பூங்காற்றிலே உன் சுவாசத்தை...

படம்: உயிரே
குரல்: உன்னிமேனன், சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து


ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா

பூங்காற்றிலே...

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே
ஓடோடி வா...

பூங்காற்றிலே...

கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை

வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா

பூங்காற்றிலே...

2.8.05

அத்திக்காய் காய் காய்

படம் - பலே பாண்டியா
பாடியவர் - ரி.எம்.சௌந்தரராஜன்+P.B.சிறீநீவாஸ்+பி.சுசீலா+ஜமுனா ராணி
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஷ்வநாதன்+ரி.ஆர்.ராமமூர்த்தி


அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ!
என்னுயிரும் நீயல்லவோ..!

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ..

உள்ளமெலாமிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையென்னை காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா