16.10.07

பிடிக்கும் உனை பிடிக்கும்

படம் : ஆழ்வார் (2006)
இசை : சிறீகாந்த், தேவா
இயக்கம் : செல்லா
பாடியவர்கள் : மதுஷ்ரி
நடிப்பு : அஜித்,அஸின்

பிடிக்கும் உனை பிடிக்கும்
அழகா உனைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும்
ரொம்பப் பிடிக்கும்

(பிடிக்கும்)

அழகாய் இருப்பாய் எனக்குப் பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகுக்குப் பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்குப் பிடிக்கம்
அழகா உன் தமிழை உலகுக்குப் பிடிக்கும்

(பிடிக்கும்)

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்
ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தைப் பிடிக்கும்
ரேஸ்காரைப் போன்ற உன் வேகத்தைப் பிடிக்கும்

தந்தம் போல் இருக்கும் உன் தோளைப் பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடம் உன் மார்பைப் பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்

சின்னப் பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாட நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும்

(பிடிக்கும்)

No comments: