8.7.06

விண்ணோடும் முகிலோடும் விளையாடும்...

படம் : புதையல்
குரல் : சி.எஸ்.ஜெயராமன்+சுசீலா
பாடல் : மாயவநாதன்
இசை : வி-ரா
நடிகர்கள்: சிவாஜி+பத்மினி


விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணொடு கொஞ்சும்
கலை அழகே இசையமுதே..
இசையமுதே.....

(விண்ணோடும்)

அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
விளையாடி.... இசைபாடி...
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த
சொர்க்க போகமே
ஓடோடி வந்த
சொர்க்க போகமே

காணத இன்ப நிலை
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

சங்கீதத் தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே

மங்காத தங்கம் இது
மாறாத வைரம் இது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுதே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)