29.7.07

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி

கிழக்குச் சீமையிலே
குரல்: ஜெயசந்திரன், எஸ் ஜானகி
வரிகள்: வைரமுத்து



கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே...

வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங்காட்டு வழி கள்ளப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே
வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு

(வண்டிமாடு)

அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா
அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளக்கி ஒத்த எடந்தானே
தவளைக்கும் பொம்பளக்கும் ரெண்டு எடந்தானே

(வண்டிமாடு)

14.7.07

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

படம் - நான் அவன் இல்லை
பாடியவர் - ஜெயதேவ், சங்கீதா ராஜேஸ்வரன்
இசை - விஜய் அன்ரனி





ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு...

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு....

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊ..ட்டிட...
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...
லட்சம் மீன்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...
எந்த பெண்னை காணும் போதும் உன்னை காண்கிறேன்...
உன்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு....

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்
ஏன் இந்த மேல் மூச்சு...

11.7.07

இள நெஞ்சே வா

படம் : வண்ன வண்ணப் பூக்கள்
இசை : இளையராஜா
குரல் : கே ஜே ஜேசுதாஸ்
வரிகள் : வாலி


இளநெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்..
என்னோடு ஒரு சங்கீதம்...
இந்நேரம்...

(இள நெஞ்சே வா)

பச்சைப் புல் மெத்தை விரித்து
அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்
செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடை போலே
வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம்
செம்மீன் தேடுதே...
இந்நேரம்...

(இள நெஞ்சே வா)

அற்புதம் என்ன உரைப்பேன்..
இங்கே வர என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்தேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுத்தேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்,
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும்
என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு
விண்ணைத் தீண்டுதே...
இந்நேரம்...

(இள நெஞ்சே வா)

பூவே செம்பூவே உன் வாசம்

பாடல் : பூவே செம்பூவே
படம் : சொல்லத் துடிக்குது மனசு (1988)
இசை : இளையராஜா
குரல் : கே. ஜே. ஜேசுதாஸ்
வரிகள் : ???

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இன்னாளும் என்னாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)