28.6.06

நான் உள்ளதைச் சொல்லட்டுமா

படம் : வசந்த ராகம்
குரல் : ஜேசுதாஸ், சுரேந்தர், சுசீலா
பாடல் : வாலி
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : விஜய்காந்த், ரஹ்மான், சுதா சந்திரன்


நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்
பொன்மகளும் மன்னவனும் பெருவாழ்வு காணவேண்டும்
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

கூடுகட்டி வைத்திருந்தேன் குருவியோடு வாழ்ந்திருந்தேன்
நாடு விட்டு வந்தபோது நானொருவன் பிழைத்து வந்தேன்
பேதை முகம் காணவில்லை தேடி ஓடக் காலுமில்லை
கண்ணெதிரில் பார்த்தபோது கையணைக்க உரிமையில்லை
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

வீணையொன்று கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்
வேறொருத்தன் சொந்தமென்று மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்
இன்று வரை தொட்டதில்லை கைவிரலும் பட்டதில்லை
இன்னொருவன் வீணை இது சுதிலயம்தான் கெட்டதில்லை
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

என்னுடைய வானத்திலே இருட்டிய நேரத்திலே
வெண்ணிலவைக் காணவில்லை விடிவிளக்கை ஏற்றி வைத்தேன்
விளக்கேற்றி வைத்தவுடன் வெண்ணிலவும் வந்ததம்மா
வெண்ணிலாவைக் கண்டவுடன் பெண்ணிலாவும் தவித்ததம்மா

நிலவே வந்ததென்று நெய்விளக்கை அணைப்பேனா
நெய்விளக்கு போதுமென்று நிலவைத்தான் வெறுப்பேனா
இருகரை நடுவினிலே நதி போல் ஓடுகிறேன்
விடுகதை நானாகி விடையைத்தான் தேடுகிறேன்
இறைவா... என் இறைவா..
இதற்கொரு பதிலைச் சொல் இறைவா..

நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் சூழ வேண்டும்
பொன்மகளும் மன்னவனும் நிம்மதியைக் காணவேண்டும்
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

5.6.06

வெண்மதி வெண்மதியே நில்லு

திரைப்படம்: மின்னலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: திப்பு
எழுதியவர்: வாலி

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெல்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம்
துன்பம் வேண்டாம்

(வெண்மதி)

ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே

தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே
அளந்து பார்க்கப் பல விழியில்லையே
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே

(வெண்மதி)

ஐந்து நாள் வரை அவள் மொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
இரத்த நாளங்கள் இராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே

(வெண்மதி)

தாயின் முகம் இங்கு நிழலாடுது

படம்: தங்கைக்காக
பாடியவர்: பி.சுசீலா

இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிப்பு: லஷ்மி


தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது


தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது

தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது


கண்ணில் இமையாக
தங்கை நலமாக
காணும் துணையல்லவோ
பொன்னைக் கொடுத்தேனும்
பூவைக் கொடுத்தேனும்
போற்றும் உறவல்லவொ
தானாட மறந்தாலும்
சதையாடும் என்பார்கள்
தாளாத பாசத்தில்
அண்ணா என்றழைப்பார்கள்
ஆசை மனமுண்டு
பூஜை மலர் உண்டு
தெய்வம் நீயல்லவோ
அண்ணா... தெய்வம் நீயல்லவோ

தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது

மண்ணில் இடம் கொண்ட
தென்னை இளம் கன்று
மண்ணைப் பிரியாதண்ணா
மங்கை முகம் கொண்ட மஞ்சள் நிறம்
என்றும் பெண்ணைப் பிரியாதண்ணா
தன் வீடு மறந்தாலும் தாய் வீடு மறவாது
தன்னாவி பிரிந்தாலும் அண்ணாவைப் பிரியாது
எங்கே இருந்தாலும் உன்னை மறவாத உள்ளம்
இதுவல்லவோ அண்ணா...
உள்ளம் இதுவல்லவோ

தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது

கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது