28.4.06

உன்னக் கண்டு நானாட

படம் : கல்யாணப் பரிசு
குரல் : சுசீலா
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை : ஏ.எம்.ராஜா
நடிகை : சரோஜாதேவி


பாடல்

உன்னக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா...
உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா...
வேறேன்ன வேண்டுமடா...

(உன்னைக்)

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...

படம் : ஆடிப்பெருக்கு
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
நடிகை : சரோஜாதேவி

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான காதல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

பொருளோடு வாழ்வு உருவாகும்போது
புகழ் பாட பலர் கூடுவார் - அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - வீணில்
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)