29.9.08

உள்ளமெல்லாம் தள்ளாடுதே

படம் : தூரத்து இடி முழக்கம்.
பாடியவர்கள் : ஜேசுதாஸ் & ஜானதி.


உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே


துள்ளும் அலைதொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே


அன்புமொழி பேசி என்னாசைவலை வீசி
கன்னிமீனை அள்ளிக்கொள்ள கைதாவுதே

வாய்மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா?
வண்டுவந்து தீண்டாமல் பூவாகுமா?
கொண்ட ஆசைகள் கைகூடுமா?
எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா?
எண்ணும் யோகங்கள் உண்டாகுமா?

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே


அன்புமொழி பேசி என்னாசைவலை வீசி
கன்னிமீனை அள்ளிக்கொள்ள கைதாவுதே

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே


துள்ளும் அலைதொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

ஆண்மனம் வைத்தால் அஞ்சி பின்வாங்குமா?
நம்பியுள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா?
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா?
தாலியென்ற வேலிகட்டி காப்பாற்றுவேன்
தங்கம் போலுன்னை பாராட்டுவேன்!

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே


துள்ளும் அலைதொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே