30.4.06

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

படம் : மீண்ட சொர்க்கம்
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : டி.சலபதி ராவ்
நடிகை : பத்மினி


கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

மாலையிலும் அதிகாலையிலும்
மலர் மேலும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

கோவில் கண்டேன்
அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீயிருந்தாய்
ராகமும் தாளமும் பாவமும் நீயே
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

படம் : பறக்கும் பாவை
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சரோஜாதேவி


யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்

(யாரை)

வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ
ஓ......ஒ.....

(யாரை)

அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு
ஆ,,,,,,ஆ,,,,,,,,,,,

(யாரை)