4.5.06

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

படம் : காத்திருந்த கண்கள்
குரல் : பி.பி.ஸ்ரீனிவாஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை :
நடிகர்கள் : ஜெமினி, சாவித்திரி


வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?

காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா