10.4.09

கதாநாயகன் கதை சொன்னான்

திரைப்படம் - வேட்டைக்காரன்

கதாநாயகன் கதை சொன்னான்
அந்தக்கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு (கதா)
கதாநாயகி கதை சொன்னாள்
அந்தக்கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு
(கதா)

காவிரிக்கரைக்கு வரச்சொன்னான்
இளங்கன்னத்தில் ஒன்று தரச்சொன்னான்
கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான்
என்னைக்கட்டிக்கொண்டான் நெஞ்சில் ஒட்டிக்கொண்டான்

அங்கயற்கண்ணி தேசத்திலே
அழகிய வைகை ஓரத்திலே
பொங்கும் காதல் வேகத்திலே
எனைப்பூட்டிக்கொண்டான் கொடி நாட்டிக் கொண்டான்
(கதா)

குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளிமொழிச் சோலையிலே
முற்றாத கனியென்னைத் தேடிக்கொண்டான்
மெல்லமூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான்

மாமல்லபுரத்துக் கடல் அருகே
இந்தமங்கை இருந்தாள் என்னருகே
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு
நாங்கள்படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு
(கதா)

வெள்ளி நிலா முற்றத்திலே

திரைப்படம் - வேட்டைக்காரன்

வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே

வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய


முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய


நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே