21.9.07

கனாக் காணும் கண்கள் மெல்ல

படம் - அக்னி சாட்சி
குரல்கள் - S.P பாலசுப்ரமணியம், சரிதா
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் - வாலி




கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!
உலாப் போகும் நேரம் கண்ணே!

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!

நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி!
விளக்கு ஏற்றி வைத்தால் கூட,
நிழல் போலத் தோன்றும் நிஜமே!
நிழல் போலத் தோன்றும் நிஜமே!

“நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான்,
உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட
என் நெற்றியில் நீறு போல்,
திருநீறு போல் இட்டுக்கொள்கிறேன்”


கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல

புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன?
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று,
நிகழ்காலம் கூறும் கண்ணே!
நிகழ்காலம் கூறும் கண்ணே!

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!




சரிதா என்றாலே அந்தக் குண்டு கண்கள் சட்டென்று நினைவுக்கு வரும் - கூடவே ஒலிப்பது அவரது குரல். அருமையான குரல் வளம் படைத்தவர் - நிறைய நடிகைகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார். இயக்குநர் இமயத்தின் கண்டுபிடிப்பு. 1979-இல் தெலுங்கு மரோசரித்ரா படத்திற்காக நடந்த தேர்வில் 162-வது நபராகப் பங்கேற்கையில் - அவர்தான் நாயகி என்று கே.பி. அவர்களால் தேர்வு செய்யப் பட்டவர். மரோசரித்ராவின் வெற்றியை நாம் அறிவோம். பின்பு ஹிந்தியில் ஏக் துஜே கேலியேவாகவும் அது வந்தது - சரிதாவுக்குப் பதில் ரத்தி அக்னிஹோத்ரி! மரோசரித்ராவில் தனது அபாரமான நடிப்பில் கவர்ந்தாரோ என்னவோ, கே.பி. அவர்களின் 22 படங்களில் சரிதா நடித்திருக்கிறார். அக்னி சாட்சியும் (1982)அதில் ஒன்று.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜுலி கணபதியில் அவரைப் பார்த்தபோது உருவத்தைத் தவிர பெரிதாக வேறு வித்தியாசங்களெதுவும் இல்லாமல்தான் காட்சியளித்தார் - நடிப்பில் அதே தீவிரத்துடன்!

தண்ணீர் தண்ணீர் படத்தில் அவரது நடிப்பை மறந்திருக்க மாட்டோம்!

அக்னி சாட்சியில் சிவக்குமாரும் சரிதாவும் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடல் துன்புற்ற உள்ளத்தை ஆறுதல் படுத்தும் மருந்து.

அழும் குழந்தையைத் தேற்றுவதுபோல ஆதரவும் பாசமும் நிரம்பிய குரலுடன் இனிமையாக பாலு பாடியிருப்பார். இடையே வரும் சிறு வசன வரிகளைச் சரிதா பேசியிருக்கிறார். மெல்லிசை மன்னரின் இசையும் வாலியின் வரிகளும் பாடலுக்கு இன்னும் இனிமை சேர்த்த விஷயங்கள்.

தகவல்கள் - வற்றாயிருப்பு சுந்தர்

18.9.07

பூமுடிப்பாள் இந்த பூங்குழலி

படம் - நெஞ்சிருக்கும் வரை
இசை .எம.எஸ் .விஸ்வநாதன்
பாடடியவர்-T.M.சௌந்தரராஜன்



பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.

மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...

குலம் வாழ்க...
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி.... கண்ணில் நீரெழுதி.....

7.9.07

மாலையில் யாரோ மனதோடு பேச

பாடியவர் - ஸ்வர்ணலதா
படம் - சத்ரியன்






மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச


தேகம் பூத்ததே ஓ... ஓ...
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... ஓ...
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

கரை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல
கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ... ஓ...
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... ஓ...
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது


மாலையில் யாரோ மனதோடு பேச... என்ற பாடல் ஸ்வர்ணலதாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்கிறார்கள்.

இது பற்றி ஸ்வர்ணலதா -
"நிஜம்தான். அந்தப் பாடல்தான் என் மியூசிக் கேரியரில் ஒரு திருப்பு முனையைத் தந்தது. என் பெயரை எல்லோரிடமும் அறிமுகப்படுத்தியது. அந்தப் பாடலின் டியூனை கேட்ட போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இளையராஜா சார் இனிமையாக டியூன் போட்டிருந்தார். மணிரத்னம் சாரின் சொந்தப் படமான 'சத்ரியன்' படத்தில் வரும் இந்தப் பாடலை, நான் பாடல் டிராக்கில் மட்டும் தனியாக பாடவில்லை. மொத்த ஆர்க்கெஸ்ட்ராவோடும் சேர்ந்துதான் என் பாடலும் ரெக்கார்டிங் ஆனது. 1990-ல் பாடிய இந்தப் பாடலை இன்று வரைக்கும் ரசிகர்கள் மறக்கவில்லை. நான் போகும் கச்சேரிகளில் எல்லாம் கட்டாயம் என்னை இந்தப் பாடலையும் பாடச் சொல்வார்கள்.