10.2.08

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த

படம் : பாத காணிக்கை
குரல் : பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
நடிகர்கள்: சாவித்திரி


எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி

தேரோடும் வாழ்வில் என்று
ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி - கண்ணில்
நீரோட விட்டானடி - கண்ணில்
நீரோட விட்டானடி

கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி

காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி

(எட்டடுக்கு)