22.1.10

காதல் வைபோகமே!

படம் - சுவரில்லாத சித்திரங்கள்.
வரிகள் - கங்கை அமரன்
குரல் - மலேசியா வாசுதேவன், ஜானகி

காதல் வைபோகமே
காணும் நந்நாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுதே..

கோடைகாலத்து தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைகாலத்தில் ஆடல்
விளையாடல் கூடல்..
வானம் தாலாட்டுபாட
மலைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு, துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு..

எண்ணம் என்னென்ன வண்ணம்,
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்தராகம்
சுகபோகம், தாபம்
மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சுகபோகம், யோகம்
வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜன்மம் எடுப்பேன்..

காதல் வைபோகமே
காணும் நந்நாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுதே...