10.10.06

தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன

படம் : சித்தி
குரல் : T.M.S+சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : ஜெமினி, பத்மினி

தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

பொன்மேனி பார்ப்பதென்ன
பூவாடை கொள்வதென்ன
தன்னைத்தான் மறந்ததிலே
தண்ணீரும் சுடுவதென்ன

(பொன்)

அங்கிருந்து ஆடிவந்து
அலைகள் சொல்லும் சேதி என்ன
வெள்ளிக்கெண்டை மீனைப் போலே
துள்ளும் கண்கள் சொல்வதென்ன
துள்ளும் கண்கள் சொல்வதென்ன

சொன்னபின்னும் கேள்வி என்ன
துருவித் துருவிக் கேட்பதென்ன
முன்னும் பின்னும் பார்ப்பதென்ன
முத்தையா உன் வேகமென்ன
முத்தையா உன் வேகமென்ன

(தண்ணீர்)

மாலை வெய்யில் வண்ணம் போலே
மஞ்சள் பூசும் கோலம் என்ன
மஞ்சளோடு சேர்ந்து எந்தன்
நெஞ்சம் போடும் தாளம் என்ன
நெஞ்சம் போடும் தாளம் என்ன

அந்தி சாயும் நேரம் வந்தும்
மிஞ்சி மிஞ்சிப் போவதென்ன
அந்த நாளைக் காணும் முன்னே
அம்மம்மா ஏக்கமென்ன
அம்மம்மா ஏக்கமென்ன

(தண்ணீர்)