1.10.07

உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது

படம் - கருப்புசாமி குத்தகைக்காரர்
பாடியவர் - BOMBAY JAYASHREE


உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது.. - ஏ
கண்ணிரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது...
ஒத்தச்சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது..
தப்பிச் செல்லக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டது..
தேதித்தாள போல வீணே நாளும் தேயிற... - நான்
தேர்வுத்தாள கண்ணீரால ஏனோ எழுதுற.....
இது கனவா ...ஆஆ...ஆஆ...ஆ...ஆ
இல்ல நிஜமா...... தற்செயலா..........தாய் செயலா....
நானும் இங்கு நானும் இல்லையே....

(உப்புக் கல்லு......)

ஏதுமில்லை வண்ணமென்று நானும் வாடினேன் - நீ
ஏழுவண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..!
தாயிமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன்- நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சத்தாக்கினாய்...!
கத்தியின்றி இரத்தமின்றி காயப்பட்டவள் -உன்
கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்..!
மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் -உன்
நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்...!

(உப்புக் கல்லு......)

மீசைவைத்த அன்னைபோலே உன்னைக்காண்கிறேன்..- நீ
பேசுகின்ற வார்த்தையெல்லாம் வேதமாகுதே.....!
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன்-உன்
பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே...!
கட்டிலிண்டு மெத்தையுண்டு ஆனபோதிலும்-உன்
பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே..!
தென்றலுண்டு திங்களுண்டு ஆனபோதிலும் -கண்
நாளுமிங்கு தீண்டவில்லை உனது நினைவினிலே...!

(உப்புக் கல்லு......)

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!

படம்: இந்திரா
பாடியவர்: ஹரினிபாடல் வரிகள்: வைரமுத்து

ஆ... ஆ... ஆ.... ஆ...

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!
காற்று வீசும் வெய்யில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே!
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை!
என்றென்றும் வானில்!!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!


அதோ போகின்றது! ஆசை மேகம்!
மழையை கேட்டுக் கொள்ளுங்கள்!
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்!
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்!
இந்த பூமியே பூவனம்!
உங்கள் பூக்களை தேடுங்கள்!
இந்த வாழ்கையே சீதனம்!
உங்கள் தேவையை தேடுங்கள்!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!

பூவே வாய் பேசும் போது

படம் : 12B
பாடல் பூவே வாய் பேசும் ..
இசை: Harris Jayaraj
பாடியவர்: Harish Ragavendra , Mahalakshmi




பூவே வாய் பேசும் போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் பொழி கேட்டுக் கொண்டு

காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால்

கொடியோடு வாழ்வேன்
என்னைத் தாண்டிப் போனால்

நான் வீழுவேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும்

மன்றாடுவேன்

(பூவே...)

பூக்களைத் தொடுத்து

உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்

களித்திருப்பேன் அன்பே
(பூக்களை...)

காதலன் ஆணைக்குக்

காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்

பூத்திருப்பேன்
உன் சுவாசப் பாதையில்

நான் சுற்றி திரிவேன்
(காதலன்...)

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய்

என்ன நான் சொல்வேன்

நீ ஒரு பார்வையால் நெருங்கி விடு என்னை
நீ ஒரு வார்த்தையால் நிரப்பி விடு என்னை
(நீ..)

நேசத்தினால் என்னை கொன்றுவிடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை...
என் நினைவு தோன்றினால்

துளி நீரை சிந்திடு
( நேசத்தினால்....)

அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது

இன்று நீ சொன்னது

கண்ணால் பேசும் பெண்ணே

படம் : மொழி
பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களை தீரடி
(கண்ணால்)

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்
மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன்
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)
(கண்ணால்)

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி
கண்ணில் கடல்கொண்ட கண்ணில் புயல்சின்னம் ஏசோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)
(கண்ணால்)

காற்றின்மொழி... ஒலியா? இசையா?

படம்- மொழி



காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?
கடலின் மொழி... அலையா? நுரையா?
காதல் மொழி... விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?

காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அரியாது
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி...

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?
கடலின் மொழி... அலையா? நுரையா?
காதல் மொழி... விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி...