8.12.04

நதி எங்கே வளையும்...?

உயிரோடு உயிராக படத்தில் இடம் பெற்ற பாடல்

நதி எங்கே வளையும்
கரை இரண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும்
அது யாருக்குத் தெரியும்

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை.
விரும்பிப் பாத்திரம் கிடைப்பதுமில்லை
முடிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை.

எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயதில் ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்வதுமில்லை

நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து...

கனவு காண்பது கண்களின் உரிமை
கனவு கலைவது காலத்தின் உரிமை
சிதைந்த கனவைச் சேர்த்துச் சேர்த்து
அரண்மனை கட்டுவது அவரவர் திறமை
ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை

இப்பாடல் எனது பார்வையில்