17.10.07

இது ஒரு பொன்மாலைப் பொழுது

'நிழல்கள்' - 1980
வரிகள் - வைரமுத்து
குரல் - பாலசுப்ரமணியம்


பொன்மாலைப்பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

தாலாட்டுதே வானம்

கடல் மீன்கள்(1981) - கமல்

தலைவன்:
தாலாட்டுதே!

தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

தாலாட்டுதே!

தலைவி:
அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும்
ஒரே ராகம்

தலைவன்:
நிலை நீரில் ஆடும்
மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்

தலைவி:
மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்!

தலைவன்:
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்!

தலைவி:
எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே!

(தாலாட்டுதே...)

தலைவி:
இரு கண்கள் மோதி
செல்லும் போதும்
ஒரே எண்ணம்

தலைவன்:
ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும்
ஒரே ஜீவன்

தலைவி:
சொர்க்கத்திலே இது முடிவானது!

தலைவன்:
சொர்க்கம் என்றே இது முடிவானது!

தலைவி:
காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

தாலாட்டுதே!

(தாலாட்டுதே...)

தாலாட்டுதே!

கல்யாண தேன் நிலா

படம்:மௌனம் சம்மதம்
பாட்டு:வாலி

நடிப்பு:மம்மூட்டி அமலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா


கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

நெஞ்சம் எனும் ஊரினிலே

படம்: ஆறு
பாடியவர்: கோபிகா பூர்ணிமா


நெஞ்சம் எனும் ஊரினிலே!
காதல் எனும் தெருவினிலே!
கனவு எனும் வாசலிலே!
என்னை விட்டுவிட்டு போனாயே!

வாழ்க்கை எனும் வீதியிலே!
மனசு எனும் தேரினிலே!
ஆசை எனும் போதையிலே!
என்னை விட்டுவிட்டு போனாயே!

நான் தனியாய் தனியாய் நடந்தேனே!
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே!
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே!
காதலாலே...

நெஞ்சம் எனும் ஊரினிலே!
காதல் எனும் தெருவினிலே!
கனவு எனும் வாசலிலே!
என்னை விட்டுவிட்டு போனாயே!

மயிலிறகே! மயிலிறகே!

படம்: AH AAH (BEST FRIEND)
பாடியது: Madhusri, Naresh Iyer


மயிலிறகே! மயிலிறகே!
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவே! மழை நிலவே!
விழியில் எல்லாம் உன் உலா!


உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து!
நான் போடும் கை எழுத்து அன்பே!
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து!
காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்! மயிலிறகாய்!
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவே! மழை நிலவே!
விழியில் எல்லாம் உன் உலா!


மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை!
மெதுவா...மெதுவா..மெதுவா...
இங்கு வைகையில் வைத்திடு கை!

பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்!
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனசிறையில்!

ஓர் இலக்கியம் நம் காதல்!
வான் உள்ள வரை வாழும் பாடல்!

மயிலிறகாய்! மயிலகாய்!
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவாய்! மழை நிலவாய்!
விழியில் எல்லாம் உன் உலா...


உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து!
நான் போடும் கை எழுத்து அன்பே!
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே!

தமிழா! தமிழா! தமிழா!
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?
அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்!
கவி ஆக்கிட நீ வருவாய்!

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்!
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்!
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா?

பால் விளக்கங்கள்! நீ கூறு!
ஊர் உறங்கட்டும்! உரைப்பேன் கேளு!

மயிலிறகே! மயிலிறகே!
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவே! மழை நிலவே!
விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து!
நான் போடும் கை எழுத்து அன்பே!
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து!
காதல்தான் கல் எழுத்து அன்பே!
மயிலிறகாய்... மயிலிறகாய்
வருடுகிறாய்... மெல்ல

வருடுகிறாய்... மெல்ல!
வருடுகிறாய் மெல்ல!
வருடுகிறாய்....மெல்ல!
வருடுகிறாய் மெல்ல!