26.9.05

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

குரல்: ஹரிஹரன்
வரிகள்: கலைக்குமார்
படம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
இசை: S.A.ராஜ்குமார்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

15 comments:

Dharumi said...

என் சுவாசமே.. - படத்தில் நல்ல வரிகள் உள்ள பாட்டுக்கள் ஓரிரண்டு உண்டல்லவா?

தாருங்களேன்.

Dharumi said...

மன்னிக்கவும்...தவறான பெயரைத் தந்து விட்டேன். அரவிந்தசாமி நடித்த அந்த படத்தின் பெயர்...ம் ம் ம் ...நினைவில் வ்ந்ததும் மீண்டும் வருகிறேன்.

என் சுவாசக்காற்றே..?

Chandravathanaa said...

தருமி
நினைவு வந்து விட்டதா?

Anonymous said...

Sie haben doch ein Sohn der heißt Tileepan noch einen Sohn der heißt Thumilan und eine Tochter die heißt Teepa oder??

Dharumi said...

வந்திரிச்சி...வந்திரிச்சி

என் சுவாசக்காற்றே - படம்
சின்ன சின்ன மழைத் துளி - பாடல்

அதே படத்தில் இன்னொரு பாட்டின் வரிஅக்ல் பிடிக்கும்; ஆரம்பம் நினைவில் இல்லை.

enRenRum-anbudan.BALA said...

chandravadhana,
mika nalla pAtal! ninaivUttiathaRku nanRi!

Chandravathanaa said...

தருமி
இதோ சின்னச் சின்ன மழைத்துளி பாடல்.
நல்ல பாடல்.

Chandravathanaa said...

நன்றி பாலா.

தருமி
மற்றைய பாடல் நினைவு வந்து விட்டதா?
நயாகராப் பாடலா? அல்லது தீண்டாய் மெய் தீண்டாய் பாடலா?

Chandravathanaa said...

Hello Anonmy
Du hast recht. Ich habe zwei soehne, sie heissen Thileepan und Thumilan! Und eine Tochter, sie heisst
Theepa.

Anonymous said...

எனது பெயர் பிரதாப். நாங்கள் எல்லோரும் Stuttgart தமிழாலயத்தில் படித்தோம். அவர்களை சுகம்கேட்டதாக கூறவும்.

சுதர்சன்.கோபால் said...

Padam: Unnidaththil ennaik koduththeen

Varikal:Kalaikkumar

Isai:S.A.Rajkumar

Chandravathanaa said...

தகவல்களுக்கு நன்றி சுதர்சன்.

Chandravathanaa said...

நல்லது பிரதாப்
பிள்ளைகளோடு கதைத்து விட்டுச் சொல்கிறேன்.
சுகம் கேட்டதையும் அவர்களிடம் கண்டிப்பாகச் சொல்கிறேன்:

eelanesan said...

தொடுவானம் தொடப் போகும் போது தூரம் தூரம் போகும் இருந்தாலும் அதை தீண்டிப் பார்க்கும் நேரம் வந்து சேரும்....

இந்த பாடல் வரிகள் எந்த பாடலில், எந்த படத்தில் என்று தெரியுமா?

eelanesan said...

தொடுவானம் தொடப் போகும் போது தூரம் தூரம் போகும் இருந்தாலும் அதை தீண்டிப் பார்க்கும் நேரம் வந்து சேரும்....

இந்த பாடல் வரிகள் எந்த பாடலில், எந்த படத்தில் என்று தெரியுமா?