18.10.05

சின்னச் சின்ன மழைத்துளிகள்

படம் - என் சுவாசக்காற்றே
பாடியவர் - M.G.சிறீக்குமார்
இசை - A.R.ரகுமான்

வரிகள்: வைரமுத்து

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி... இரு துளி...
சிறு துளி... பல துளி...
பட பட தட தட தட தட
சட சட சிதறுது

சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ


சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சிறு பூவினிலே விழுந்தால்
ஒரு தேன்துளியாய் வருவாய்
சிறு சிற்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய Shower இது
அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது
இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்
நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ


சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ
சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

13 comments:

எழில் said...

நிறைய பிழைகள் உள்ளதே! :-)

//சர்க்கரைவாகமோ//

சக்கரவாகமோ

//மழையின் பாறைகள் //

மழையின் தாரைகள்

//சிறு சிற்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே ----------- //

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தனவே மலர்வாய்

//அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய தவறிது//

ஒரு பெரிய Shower இது
//அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது//
இதற்கு அடுத்ததாக இரு வரிகளைக் காணவில்லை

இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

//அந்த மேகம் சுரந்த பாதை//

அந்த மேகம் சுரந்த பாலில்

//மண்ணில் சொர்க்கம் மீளுவாய்//

மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

Chandravathanaa said...

மிகவும் நன்றி எழில்.
திருத்தி விட்டேன்.

யோசிப்பவர் said...

இன்றுதான் இந்த பிளாக்கை பார்த்தேன். நல்ல முயற்சி!

ramachandranusha said...

சந்திரா மிக்க நன்றி. இந்த பாட்டு எனக்கு மிக விருப்பமானது. காரணம் மழையைக் கண்டால், இப்பொழுதும் நனையாமல் இருக்க மாட்டேன். பிள்ளைகளும் அப்படிதான். சென்னையில் இருந்தப் பொழுது மழை வந்தால் இரண்டை ஆட விட்டு விடுவேன். சளி எல்லாம் பிடிக்காது. இந்த முறை சென்னையில் இருந்தப் பொழுதுக்கூட மழையில் நனைந்துக் கொண்டே மெல்ல அடி வைத்துக் கொண்டு வீடு திரும்பியப் போது, எதிரில் வருபவர்கள் முகத்தில் புன்னகை.மழை மீது இவ்வளவு ஆசை இருந்ததால்தானோ, மழையே இல்லாத பாலைவனத்தில் வாழ்க்கை :-(

குமரன் (Kumaran) said...

/மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்/

'மண்ணில் சொர்க்கம் ஏய்துவாய்' தான் சரி என்று தோன்றுகிறது...

நல்ல பாடல்.

Dharumi said...

அன்புள்ள ready reckoner,
பாடலுக்கு நன்றி.
வரிகள்: வைரமுத்து தானே, சேர்த்து விடலாமே!

தாணு said...

பாடலின் picturisation ரொம்ப அழகாக இருக்கும். சக்கரவாகப் பறவையின் இயல்பு தெரியுமல்லவா? பூமி முழுக்க நீர் இருந்தாலும் மழைத்தண்ணீரை மட்டுமே குடிக்குமாம், அதுவும் மண்ணில் விழும் முன்பு. சரிதானா நான் சொன்னது?

Chandravathanaa said...

யோசிப்பவர், உஷா, குமரன், தருமி, தானு
உங்கள் அனைவரினதும் வரவுக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி.

உஷா
எனக்கும் மழை பிடிக்கும். மழை கொட்டும் போது எல்லா வேலைகளையும் விட்டு விட்டு
அதன் அழகை யன்னலினூடு பார்த்துக் கொண்டிருப்பேன். பல பொழுதுகளில் குடை பிடிக்காமல்
நனைந்த படியே சென்றிருக்கிறேன்.

மழை மீது இவ்வளவு ஆசை இருந்ததால்தானோ, மழையே இல்லாத பாலைவனத்தில் வாழ்க்கை
வருத்தமா...?

குமரன்
ஏதுவாய், ஏய்துவாய் இதில் எது சரியென்று மீண்டுமொருமுறை பாடலைக் கேட்க முடிந்தால் கேட்டு விட்டு எழுதுகிறேன். சில சமயங்களில் சொற்களை விளங்கிக் கொள்வது சிரமமாகி விடுகிறது.

தருமி
தகவலுக்கு நன்றி.

தானு
நீங்கள் சொன்னது சரியாகத்தான் இருக்கும்.

சீனு said...

தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி, பாராட்டுக்கள்.
ஒரு சிறு விண்ணப்பம். ஆங்காங்கே சிறு பிழைகளை மட்டும் களைந்தால், மிக நன்றாக இருக்கும்.

BTW, யாருக்காவது இந்த வரிகளுக்கு அர்த்தம் தெரியுமா?

"இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது"

சீனு.

Chandravathanaa said...

நன்றி சீனு

யோசிப்பவர் said...

லேபிலிடும் முறையை(ஒவ்வொரு பாடலுக்கும் தனிதனி லேபில் என்றில்லாமல்!!) கொஞ்சம் மாற்றினால், விருப்பமான வகைகளை தேடிப் பிடித்து படிக்க வசதியாக இருக்கும்.;-)

வந்தியத்தேவன் said...

அருமையான பாடல் அக்கா. நீங்கள் எழுத்துப் பிழையாக மாறியதற்க்கு காரணம் சில வரிகள் ஏ ஆர் ரகுமானின் வரிகளில் கொஞ்சம் கஸ்டமாகத் தான் கேட்கின்றது, மற்றும்படி சூப்பரான வரிகளும் இசையும் காட்சி அமைப்பும் ஆணால் படம் தான் சூப்பர் டூப்பர் ப்ளாப். இதே படத்தில் வரும் தீண்டாய் நீ மெய் தீண்டாய் பாடலும் மிகவும் சிறந்த பாடல்.

Yo.Puratchi Kannah said...

ஒரு கானகத்தில் முதன்முதல் இப்பாடல் கேட்டேன். அதுவும் ஒரு மழைக்காலம். என் துயர்க்காலம். அதைப் போக்கியது இப்பாடற்கோலம்.