17.9.05

எங்கே நிம்மதி...! எங்கே நிம்மதி...!

தருமியின் விருப்பத்துக்காக

படம் : புதிய பறவை
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.S

எங்கே நிம்மதி...! எங்கே நிம்மதி...!
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த
இறைவன் கொடியவனே
ஹோ, இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே
ஓ, உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

7 comments:

Dharumi said...

மிகவும் நன்றி ...வரிகளைச் சேர்த்துவிட்டேன்

Garunyan said...

Listening to tragical songs is not an encouragable habit.
Everytime you listen that will washout your strength & courage!

சீனு said...

One of my favourites song.

//கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த
இறைவன் கொடியவனே//

//என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே//

கவிஞர் இங்கே கலக்கிட்டார்.

சீனு said...

//Listening to tragical songs is not an encouragable habit.
Everytime you listen that will washout your strength & courage!
//
You are perfectly right. But when you are in sad mood and you listen to these type of songs (that fits your situation), it may give you some relaxation (and that depends on the type of person).

Chandravathanaa said...

காருண்யன், சீனு
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

SP.VR.சுப்பையா said...

நல்லதொரு பாடலைப் பதிவிட்டுப் பழைய நினைவுகளைக் கிளரிவிட்டீர்கள் சகோதரி. இந்தப் படத்தைத் திரையிட்ட அனறே பார்த்து மகிழ்ந்தவன் நான!

மிக்க நன்றி

இந்தப் பாடலை உருவாக்கியவர் கவியரசர் கண்ணதாசன்.
உயிர் கொடுத்துப் பாடியவர்.T.M.S

காலத்தால் அழிக்க முடியாத பாடல்!

Chandravathanaa said...

நன்றி SP.VR.சுப்பையா.