28.4.09

சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கி

பாடியவர்கள்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்

சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு

துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்
துலங்கிடும் தனி செழிப்பு

பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப்
பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு - அதன்
பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது
காதறுந்த பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு - வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு

No comments: