1.10.07

காற்றின்மொழி... ஒலியா? இசையா?

படம்- மொழி



காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?
கடலின் மொழி... அலையா? நுரையா?
காதல் மொழி... விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?

காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அரியாது
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி...

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?
கடலின் மொழி... அலையா? நுரையா?
காதல் மொழி... விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி...

11 comments:

sellam said...

ippadalkalai keetkum padi kodukkavum

Chandravathanaa said...

viraivil kodukkiren.

துளசி கோபால் said...

அட! இன்னிக்குதாங்க இந்தப் பாடலின் வரிகளைத் தேடி எடுக்கலாம்னு நினைச்சேன். நம்ம தமிழ்ச்சங்கத்துலே பிள்ளைகளைப் பாடப் பழக்கலாமுன்னுதான்.
என் வேலையை சுலபமாக்குனதுக்கு நன்றி வதனா.

காரூரன் said...

உங்களுக்கு நல்ல ரசனை இருக்கின்றது. இவ்வளவு பாடல்களையும் பொறுமையாக கேட்டு வரிகளை வடித்து தந்தமைக்கு நன்றிகள். மொழி படத்து பாடல்கள் மிகவும் அர்த்தம் உள்ளவையாக உள்ளது. உங்கள் தளத்திலேயே வாசிப்பதற்கு நிறைய இருக்கின்றது. விமர்சிக்கின்ற அளவிற்கு நான் வளராவிட்டாலும், உங்கள் ஆக்கங்களின் கையாளுகை எனக்கு நன்றாக பிடித்திருக்கின்றது. வாழ்த்துக்கள்.

Victor Suresh said...

“ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்” என்பதில் “உச்சி மீன்கள்” என்பது என்ன என்று பிடிபடவில்லை. ஒரு வேளை நீங்கள்தான் தவறாக எழுதி விட்டீர்களோ என்று பலராம், சுஜாதா என்று இருவரும் தனித் தனியாக பாடியதையும் சில முறைகள் கேட்டுப் பார்த்தேன். இன்று காலை விழித்த கணத்தில்தான் பிடிபட்டது உச்சி மீன்கள் என்பது நட்சத்திரங்கள் என்று.

Chandravathanaa said...

துளசி
இந்தப் பாடல் பதிவு உங்களுக்கும் உதவியதில் எனக்கும் சந்தோசம்.

Chandravathanaa said...

விமர்சிக்கின்ற அளவிற்கு நான் வளராவிட்டாலும், உங்கள் ஆக்கங்களின் கையாளுகை...

காரூரன்
விமர்சனத்துக்கான வரைவிலக்கணம் பற்றி எனக்கும் எதுவும் தெரியாது.
இலக்கணங்கள், வரைவிலக்கணங்கள் பற்றிய சிந்தனையின்றி - ஒரு பதிவை வாசிக்கும் போது - உள்ளத்தில் தோன்றும் உணர்வைப் பதிவதே அழகாகவும் உண்மையாகவும் இருக்கும்.
உங்கள் உள்ளத்தில் தோன்றியதை இங்கு பதிந்தீர்கள். அது என்னை மகிழ்ச்சிப் படுத்தியது.
நன்றி.

Chandravathanaa said...

“ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்” என்பதில் “உச்சி மீன்கள்” என்பது என்ன என்று பிடிபடவில்லை. ஒரு வேளை நீங்கள்தான் தவறாக எழுதி விட்டீர்களோ என்று பலராம், சுஜாதா என்று இருவரும் தனித் தனியாக பாடியதையும் சில முறைகள் கேட்டுப் பார்த்தேன். இன்று காலை விழித்த கணத்தில்தான் பிடிபட்டது உச்சி மீன்கள் என்பது நட்சத்திரங்கள் என்று.

ஏவிஎஸ்
பாடலில் சந்தேகம் தோன்றிய போது அதை ஆராய்ந்தது மட்டுமல்லாது
இங்கும் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

வித்யா கலைவாணி said...

இசைக்குள் அமிழ்ந்து அழிந்து விடக்கூடிய ஒரு அழகான பாடலை இங்கு தந்ததற்கு நன்றி

Chandravathanaa said...

நன்றி வித்யா கலைவாணி

நளாயினி said...

இந்தப்பாடல் தான் இப்ப ஒரு மாசமா காறுக்கை போகுது. அப்படியான மனதை கவர்ந்திழுத்த பாடலும் மொழிபடமும் தான்.