31.7.06

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா

படம்: எதிர் நீச்சல்
பாடியவர்கள்: பி.சுசீலா + TMS
இசை: வி.குமார்
நடிகர்கள்: சௌகார்ஜானகி+ஸ்ரீகாந்த்


சுசீலா:
ஏன்னா, நீங்க சமர்த்தா?
நீங்க அசடா?
சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
அசடா இருந்தா பறிப்பேளாம்

TMS:
ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?

சுசீலா:
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டு பொடவையா வாங்கிக்கறா

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS :
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்கறாண்டி.. பட்டு
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
பட்டு புடவைக்கு ஏதடி?
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?

சுசீலா:
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு?
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக்
கண்டா பட்டு?

TMS:
பட்டு கிட்டு பேரைச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு

சுசீலா:
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட
எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக் கல்லு பேசரி போட்ட
எடுப்பா இருக்கும் மூக்கு

TMS:
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?

சுசீலா:
எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம்
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS:
ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு

சுசீலா:
பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?

TMS :
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

சுசீலா:
என்னத்தை செய்வேள்?

TMS:
சொன்னத்தை செய்வேன்

சுசீலா:
வேறென்ன செய்வேள்?

TMS:
அடக்கி வெப்பேன்

சுசீலா:
அதுக்கும் மேலே?

TMS:
ம்ம்ம் பல்லை உடைப்பேன்

சுசீலா:
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS:
பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?

10 comments:

G.Ragavan said...

அருமையான பாடலை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள் சந்திரவதனா. அதில் பி.சுசீலா அவர்கள் க்கும்னு சொல்றது cho chweet....

உணர்ச்சிப் பூர்வமாக நகைச்சுவையாக அமைந்த பாடல் இது.

ரவி said...

அருமையான பாடல்...நினைவூட்டலுக்கு நன்றி..

dondu(#11168674346665545885) said...

இதில் என்ன விசேஷம் என்றால் இப்பாட்டில் குறிப்பிடப்படும் அடுத்தாத்து அம்புஜம் படத்தில் ஒரு காட்சியில் கூட வரவில்லை என்பதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Chandravathanaa said...

றாகவன், ரவி, யோகன், டோண்டு
உங்கள் கருத்துக்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.

இப்பாடல் இடம் பெற்ற படமான எதிர்நீச்சலை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.
நகைச்சுவை கலந்த சமூகப்படம். இதே போல பாமாவிஜயமும் என்னைக் கவர்ந்த படங்களில் ஒன்று.

மலைநாடான் said...

சந்திரவதனா!
இன்று வீட்டில் வலைப்புக்கள் பற்றிக் கதைக்கும்போது, இப்பாடலும் பதிவில் வந்துள்ளதைச் குறிப்பிட்டேன். உடனே என் மூத்த மகள், அப்பா அதை அச்சுப்பிரதி செய்து தாருங்கள். எனக்கும் பிடிக்குமென்றாள். ஆச்சரியமாக இருந்தது...

பாரதிய நவீன இளவரசன் said...

எதிர்நீச்சல்.....என் டாப் டென் அபிமானப்படங்களில் ஒன்று. படம் frame to frame என்னைக்கவர்ந்தது. 80கள்வரை சக்கைபோடு போட்டுவந்த மைலாப்பூர்-திருவல்லிக்கேணி ஒண்டுக்குடுத்தன நகர வாழ்க்கை பல நாடகாசிரியருக்கு நல்ல கதைக்கான தொழிற்சாலையாக இருந்திருக்கிறது.

இந்தப்பாடலில் வரும் ஸ்ரீகாந்த்-சௌகார் ஜானகி இருவரது நடிப்பும் என்னைக் கவர்ந்தவொன்று. துவக்க காலத்தில் காதல் நாயகனாக (வெண்ணிற ஆடை) அறிமுகமானாலும், பிற்காலத்தில், வில்லனாகவே அதிகமாக வேடமேற்றவர் ஸ்ரீகாந்த். நாடக உலகில் நல்ல அனுபவம் வாய்ந்த நடிகர் - இந்த எதிர்நீச்சல் நாடகம் மற்றும் சினிமாவின் அவரேற்று நடித்த கதாபாத்திரத்தில் கச்சிதமாகத் தன்னைப் பொருத்திக்கொண்டு பரிமளித்தவர். எழுபதுகளில், ஜெயகாந்தன் எழுத்தில் பீம்சிங் உருவாக்கிய 'சில நேரங்களில் சில மனைதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' ஆகிய படங்களில் யதார்த்தமான நடிப்பின் மூலம் பலரது மனதில் இடம்பிடித்தவர். இன்னும்பல படங்களில் பல குணச்சித்திர வேடங்களில், அவர் நடித்திருந்தாலும், 'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்தேளா...' பாடற்காட்சியில் வரும் ஸ்ரீகாந்த்தான் வித்தியாசமாகவும் ரசிக்கத்தக்கவருமாக எனக்குத் தோன்றுகிறார்...அடுத்தாத்து அம்புஜத்தை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி சந்திரவதனா...

Chandravathanaa said...

வெங்கடேஸ் வரதராஜன்
வரவுக்கும் தகவல்களுக்கும் மிகவும் நன்றி.

Muse (# 01429798200730556938) said...

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?

சே . சே. தப்பு.

enRenRum-anbudan.BALA said...

நல்ல பாட்டு, நல்ல படமும் கூட ! நினைவூட்டலுக்கு நன்றி.

Chandravathanaa said...

நன்றி பாலா.

நன்றி muse