30.7.06

ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்

படம் : உயிரா மானமா
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகை : விஜயநிர்மலா

ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்
அவசரத்தில் படகு விட்டாய்
காற்றினிலே சிக்கிக் கொண்டால்
என்ன வரும் என் உயிரே
என் கண்ணீர்தான் அங்கேயும்
காவல் வரும் என் உயிரே
கண்ணீர்தான் அங்கேயும்
காவல் வரும் என் உயிரே

பாத்திரத்தின் நிறம் போலே
பாலின் நிறம் மாறுவதோ
நேத்திரத்தை மறந்து விட்டு
நீ எங்கே வாடுவதோ
கோடையிலே மர நிழலும்
கோபத்திலே காதலியும்
ஆறுதலைத் தரவில்லையேல்
யார் தருவார் என்னுயிரே

விளக்கினிலே நெருப்பு வைத்தால்
வீடெல்லாம் ஒளியிருக்கும்
மனதினிலே நெருப்பு வைத்தால்
வைத்தவரை எரிக்காதோ
சத்தியத்தை மறந்து விட்டால்
தனி வழியே போக வரும்
தனி வழியே போனாலும்
தலைவிதிதான் கூட வரும்

காட்டிலென்னை நிறுத்தி விட்டு
காதவழி செல்கின்றாய்
காதவழி சென்றாலும்
காதல் வழி மறவாதே
உன்னிடத்தில் ஆசையிலே
நல்ல வழி நானுரைத்தேன்
என்னை நீ மறந்தாலும்
சொன்ன மொழி மறவாதே
மறவாதே.. மறவாதே..

3 comments:

selvaraj said...

Hi,
Ungalidam nala padal thoguppukal ullathu.Intha padal oli vadivil kidaikkuma?
Melum, "Manmalai" padaththil varum "Nenjam alai mothave" padal oli vadivil irukkiratha?
nandri

Chandra said...

செல்வராஜ்,
இந்தப் பாடலை ஒலி வடிவில் எடுக்க முடியுமா எனப் பார்க்கிறேன்.
மணமாலை படத்தில் இடம் பெற்ற நெஞ்சம் அலை மோதவே... பாடலை நானும் தேடுகிறேன். கிடைத்தால் கண்டிப்பாக இங்கு தருவேன். ஆனால் உங்கள் வலை வேலை செய்யவில்லை. தரும் போது உங்களுக்கு எப்படி அறியத் தருவது என்று தெரியவில்லை

Chandravathanaa said...