1.8.06

காதோடுதான் நான் பாடுவேன்

பாடியவர் - எல்.ஆர்.ஈஸ்வரி
படம் - வெள்ளி விழா

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்...

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடுதான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

14 comments:

மலைநாடான் said...

MS விஸ்வநாதனின் இசையமைப்பில், துள்ளிசைப்பாடகி L.R ஈஸ்வரி, பாடிய மிக மென்மையான பாடல். நினைவுக்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி சந்திரவதனா!

மங்கை said...

பெண்மைக்கே உரித்த குணங்களான நானம், தாய்மை,மென்மை, பொருமை ஆகியவை வெளிப்படும் பாட்டு.. நான் மிகவும் ரசித்த பாட்டு..

செந்தில் குமரன் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று தந்ததற்கு நன்றி.

சீனு said...

//MS விஸ்வநாதனின் இசையமைப்பில், துள்ளிசைப்பாடகி L.R ஈஸ்வரி, பாடிய மிக மென்மையான பாடல்.//
இந்தப் பாடல் 'மேரே நாம் ஜோக்கர்' படத்தில் வரும் 'ஜீனா யஹான்' படலில் இருந்து சுட்டது என்று நினைக்கிறேன்.

Sivabalan said...

சூப்பர் பாடல்...

இங்கே கொடுத்தமைக்கு நன்றி..

Chandravathanaa said...

மலைநாடான், மங்கை, குமரன், சீனு, சிவபாலன்,
உங்கள் கருத்துக்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.

பாடல் வந்த காலத்தில் பலரையும் கவர்ந்த பாடல் இது.

விடாதுபருப்பு said...

காதோடுதான் நான் பாடுவேன்

ஏன் வாயால பாடமாட்டிங்களா?

Bharateeyamodernprince said...

வெள்ளி விழா படத்தில்ஜெமினி கணேசனும் ஜெயந்தியும் நடித்த பாடல்காட்சி...காதோடுதான் நான் பாடுவேன்...L.R. ஈஸ்வரிக்கு இந்த மெலடிவகைப் பாடலைத்தந்த V.குமார், அதே படத்தில், 'நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்...' எனத்தொடங்கும் `சத்தமான பாடலை' P.சுசீலாவை பாடவைத்தார். ஜெயந்தியின் நடிப்பு சற்றே overacting போல இன்று தோன்றினாலும், திரையுலக நடிப்பில் நாடகத்தனம் மிகுந்து காணப்பட்ட காலகட்டம் என்பதை மனதில் கொண்டால், ஜெயந்தியும் வாணிஸ்ரீயும் நிச்சயம் பாராட்டுக்குரியவரென்று தோன்றும்...

Johan-Paris said...

சந்திரவதனா!
எல் ஆர் ஈஸ்வரியின் மயக்கும் குரலில் வச்து; இலங்கை வானொலியின் மங்கையர் விருப்பத்தை அடிக்கடி ஒருகாலத்தில் நிரப்பிய பாடல். நல்ல பாடலொன்று.
விடாது கருப்பு அண்ணாவுக்கு, அவங்க ,வாயாலதான் பாடுராங்க! ஆனால் "காதோடு" அதாவது காதுக்கருகில்;பாடுராங்க!!!;காதால தான் நான் பாடுரேன் - எனச் சொல்லவில்லை. தமிழ்மணத்தையே முழக்கியடிக்கும் ஒங்களுக்கா! இது புரியவில்லை. ஒண்ணும் புரியலிங்க சாமி!!
யோகன் பாரிஸ்

Chandravathanaa said...

வெங்கடேஸ் வரதராஜன், யோகன்
தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

விடாது பருப்பு
உங்கள் கேள்விக்கான பதிலை யோகன் தந்திருக்கிறார்.

Johan-Paris said...

அன்புடன் விடாது கருப்பு அவர்களுக்கு!
"விடாது பருப்பு" க்கு இட்ட பின்னூட்டத்தை ;உங்களை மனதில் வைத்து,உங்களுக்கே என நினைத்து எழுதி விட்டேன்.முதல் என்னை மன்னிக்கவும்; மேலும் "விடாது" என்ற சொல்லைக் கண்டாலே! "கருப்பு" என சேர்த்து வாசிக்குமளவுக்கு; உங்கள் எழுத்துக்களால் கவரப்பட்டவன்; மேலும் தவறு நடக்காத அளவு கவனமாக இருப்பேன்.
தங்கள் பக்கத்தில் நடந்த தவறுக்கு,சந்திரவதனாவும் மன்னிக்கவும்.
யோகன் பாரிஸ்

Chandravathanaa said...

யோகன்
நீங்கள் குறிப்பிட்ட பின்னர்தான் நானே வித்தியாசத்தைக் கவனித்தேன்.

விடாதுபருப்பு said...

ஜோ(க்)கன் பாரிஸ் தஞ்சாவூருக்கே தமிழ் ஆ!

Chandravathanaa said...

விடாது பருப்பு
வரவுக்கு நன்றி