20.7.06

கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம்...

படம்: ஆடிப் பெருக்கு
இசை: ஏ.எம்.ராஜா
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா + பீ.சுசீலா
நடிகர்கள்: ஜெமினி + சரோஜா தேவி


சுசீலா:
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்...
பாடல் இசைத்தார்

ராஜா:
கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே
பாட்டை முடித்தார்
பாட்டை முடித்தார்

சுசீலா:
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே
கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின்
சிறகை ஒடித்தார்

கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்

ராஜா:
கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்...
காட்டி மறைத்தார்

சுசீலா:
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்

ராஜா:
முன்னுமில்லை பின்னுமில்லை
முடிவுமில்லையே
மூடன் செய்த விதிகளுக்கு
தெளிவுமில்லையே

சுசீலா:
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்...
பாடல் இசைத்தார்
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்...
பாடல் இசைத்தார்

7 comments:

பாவூரான் said...

பாட்டு எழுதுனவர் பெயரையும் போடுங்க வதனா.

அப்படியே ஒரு ஆடியோ link ம் கொடுத்தீங்கன்னா, கேட்டுகிட்டே, பின்னூட்டம் போடலாம்.

G.Ragavan said...

நல்லதொரு பாடலை நினைவு செய்தீர்கள் சந்திரவதனா.

இந்தப் பாடலை எனது ஒன்பதாம் வகுப்புத் தமிழாசிரியை வகுப்பில் பாடினார்கள். அவர்கள் நன்றாகப் பாடுவார்கள் என்பதால் பாடச் சொல்லிக் கேட்போம். ஒரு நாள் இந்தப் பாடலைப் பாடி முடித்தார்கள். முடிக்கையில் அவர் லேசாக அழுதிருந்தார். எதற்காகவோ!

ரவி said...

:)

Sivabalan said...

சந்திரவதனா,

அருமை.

நன்றி.

Chandravathanaa said...

பாவூரான்,
பாட்டை எழுதியவர் கண்ணதாசனாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
சரியாகத் தெரியவில்லை. தெரிந்ததும் எழுதுகிறேன்.
ஓடியோ லிங்கும் தேடுகிறேன். கிடைத்ததும் தருகிறேன்.

றாகவன்,
அந்த ரீச்சர் எதற்காக அழுதிருப்பா என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
உங்கள் நினைவைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

செந்தழல் ரவி,
வருகைக்கு நன்றி.

யோகன்,
கருத்துக்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.
நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் என்னையும் கவர்ந்த பாடல்களே.

சிவபாலன்
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

ஞானவெட்டியான் said...

இவ்வினிய பாடலைக் கேட்க:

"கண்ணிழந்த மனிதன் முன்னே"

http://iniyavaikal.blogspot.com/2006/09/8.html

Chandravathanaa said...

மிகவும் நன்றி ஞானவெட்டியான்