16.7.06

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ

படம் : டிஸ்யூம்
குரல் : மால்குடி சுபா
இசை : விஜய் அன்ரனி
நடிகர்கள் : ஜீவா+சந்தியா
பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..
காதல் போலவே நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ.....
வேறு வேறாக நினைவு போகையில்
காதல் கொள்ளுதல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்.

பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

8 comments:

மலைநாடான் said...

ரீ.ரீ. என்னில் படம்பார்த்த கையோட பதிவோ? ஆனால் எனக்கென்னவோ 'நெஞ்சாங் கூட்டில்' தான் பிடித்தது.

Chandravathanaa said...

நன்றி மலைநாடான்.
நெஞ்சாங் கூட்டிலும் பிடித்தது. அடுத்த பதிவாக அதைப் போட எண்ணம்.

SK said...

ஏனோ தெரியவில்லை!
படத்தின் பெயரைப் போட்டதும், 'நெஞ்சாங்கூட்டில்' ராகத்தில் இதைப் பாடிப் பார்த்தேன்!
அப்படியே பொருந்துகிறது!!
நல்ல வரிகள்!

Chandravathanaa said...

நன்றி ளுமு
இதை விட நன்றாக நீங்கள் எழுதுவீர்கள்.

நாகை சிவா said...

நல்லா பாட்டுங்க.
அதிலும் மால்குடி சுபாவின் high pitch voice ரொம்பவே நல்லா இருக்கும்

Chandravathanaa said...

நன்றி நாகை சிவா

nagai.s.balamurali said...

எனக்கும் மிகவும் விருப்பமான பாடல்!

Boston Bala said...

Enakkum piditha padal... Mikka nanri :)