5.6.06

தாயின் முகம் இங்கு நிழலாடுது

படம்: தங்கைக்காக
பாடியவர்: பி.சுசீலா

இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிப்பு: லஷ்மி


தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது


தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது

தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது


கண்ணில் இமையாக
தங்கை நலமாக
காணும் துணையல்லவோ
பொன்னைக் கொடுத்தேனும்
பூவைக் கொடுத்தேனும்
போற்றும் உறவல்லவொ
தானாட மறந்தாலும்
சதையாடும் என்பார்கள்
தாளாத பாசத்தில்
அண்ணா என்றழைப்பார்கள்
ஆசை மனமுண்டு
பூஜை மலர் உண்டு
தெய்வம் நீயல்லவோ
அண்ணா... தெய்வம் நீயல்லவோ

தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது

மண்ணில் இடம் கொண்ட
தென்னை இளம் கன்று
மண்ணைப் பிரியாதண்ணா
மங்கை முகம் கொண்ட மஞ்சள் நிறம்
என்றும் பெண்ணைப் பிரியாதண்ணா
தன் வீடு மறந்தாலும் தாய் வீடு மறவாது
தன்னாவி பிரிந்தாலும் அண்ணாவைப் பிரியாது
எங்கே இருந்தாலும் உன்னை மறவாத உள்ளம்
இதுவல்லவோ அண்ணா...
உள்ளம் இதுவல்லவோ

தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது

கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது

No comments: