30.5.06

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே

படம்:கர்ணன்
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன் -T.K.ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: தேவிகா


ஒலிவடிவில்

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் இங்கே நெளியும் இங்கே
கால்கள் இங்கே நெளியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆஆஆ...

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

குழுவினர்:
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

சுசீலா:
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றித்
தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு
ஏனிந்த மயக்கம் ஆஆஆஆஆஆஅ...
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே ஏஏஏஏஏஏஏ

குழுவினர்:
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

சுசீலா:
இனமென்ன குலமென்ன
குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
ஈடொன்றும் கேளாமல்
எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன்
ஆஆஆஆஆஆஆ

குழுவினர்:
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே

சுசீலா:
கண்டபோதே சென்றன அங்கே
குழுவினர்: கண்கள் எங்கே

8 comments:

paarvai said...

பாடலின் கருத்து என்பது, காதல் வயப்பட்ட பெண்ணின் ஏக்கம்!!! இப்பாடலுக்கு அமைந்த இசை ,வெகு ஜோர்; கர்ணனில் எல்லாப் பாடல்களுமே பிரமாதம். குறிப்பாகப் இப்படப் பாடல்கள் யாவும் இந்துஸ்தானி இசையில் அமைந்தது.வீணை, மிருதங்கம்;வயிலினுடன், வட இந்திய காற்றிசை வாத்தியமான செனாய்; மற்றும் சாரங்கியும் இதில் கச்சிதமாக இசைத்து மகிழ்வூட்டுகிறது.என்றும் கேட்க இனிக்கும் பாடல்; சுசிலா குழுவில் கொஞ்சும் குரல்;பாராட்டியே ஆகவேண்டும்.
யோகன் -பாரிஸ்

paarvai said...

பாடலின் கருத்து என்பது, காதல் வயப்பட்ட பெண்ணின் ஏக்கம்!!! இப்பாடலுக்கு அமைந்த இசை ,வெகு ஜோர்; கர்ணனில் எல்லாப் பாடல்களுமே பிரமாதம். குறிப்பாகப் இப்படப் பாடல்கள் யாவும் இந்துஸ்தானி இசையில் அமைந்தது.வீணை, மிருதங்கம்;வயிலினுடன், வட இந்திய காற்றிசை வாத்தியமான செனாய்; மற்றும் சாரங்கியும் இதில் கச்சிதமாக இசைத்து மகிழ்வூட்டுகிறது.என்றும் கேட்க இனிக்கும் பாடல்; சுசிலா குழுவில் கொஞ்சும் குரல்;பாராட்டியே ஆகவேண்டும்.
யோகன் -பாரிஸ்

சுதர்சன்.கோபால் said...

அருமையான இசைச்சேர்ப்பு.அற்புதமான குரல். எனக்கு ரொம்பப் பிடித்த பழைய பாடல்களுள் ஒன்று.தமிழக முன்னாள் முதல்வரின் செல்லிடப் பேசியில் ரிங் டோனாய் இந்தப் பாடல் தான் வைத்திருந்தார் என்று எங்கோ படித்த ஞாபகம்.

உங்களது பாடற்தெரிவு அற்புதம்.தொடரட்டும் இந்தப் பணி.

Chandravathanaa said...

யோகன், சுதர்சன்.கோபால்
வரவுக்கும் பதிவுக்கும் மிகவும் நன்றி.

ENNAR said...

//ஈடொன்றும் கேளாமல்
எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன்//

எந்த பெண்ணுமே உறுதிமொழி கேட்டு தான் தன்னை அவனிடம் கொடுப்பாள் அவளுக்கு ஈடாக அவனது வார்த்தை. இவள் அதைக் கேட்காமலே தன்னை கொடுத்து குறைத்துக்கொண்டாள் தன்னுடலையா? நானே ஒரு முறை பாடி விட்டேன் எனக்குப் பிடித்த பாடல் தலைவனை பற்றி நான்எனது பிளாக்கில் தலையின் படல் இங்கா?

Chandravathanaa said...

யோகன், சுதர்சன்
தகவல்களுக்கு நன்றி.

என்னார்
எந்த பெண்ணுமே உறுதிமொழி கேட்டு தான் தன்னை அவனிடம் கொடுப்பாள் அவளுக்கு ஈடாக அவனது வார்த்தை. இவள் அதைக் கேட்காமலே தன்னை கொடுத்து குறைத்துக்கொண்டாள் தன்னுடலையா?
உடலை அல்ல. மனதைத்தான் கொடுத்திருக்கிறாள்.
அப்படித்தான் நான் விளங்கிக் கொண்டேன்.

G.Ragavan said...

சந்திரவதனா..........மிகவும் அருமையான பாடல் இது. பி.சுசீலாவின் இனிய குரல் சிறப்போ சிறப்பு..........கவியரசரும் மெல்லிசை மன்னரும் கூடிக் களித்த பாட்டு இது. சுருங்கச் சொன்னால் இது கேட்கத் திகட்டாத கானம்.

rahini said...

kaatha nilavee enra paadalaiyum poodavum