5.6.06

வெண்மதி வெண்மதியே நில்லு

திரைப்படம்: மின்னலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: திப்பு
எழுதியவர்: வாலி

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெல்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம்
துன்பம் வேண்டாம்

(வெண்மதி)

ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே

தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே
அளந்து பார்க்கப் பல விழியில்லையே
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே

(வெண்மதி)

ஐந்து நாள் வரை அவள் மொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
இரத்த நாளங்கள் இராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே

(வெண்மதி)

3 comments:

வவ்வால் said...

வாழ்த்துகள் சந்திரவதனா!

சிரில் அலெக்ஸ் பதிவில் பார்த்தேன் பாஷா இந்தியாவின் சிறந்த தமிழ் பொழுதுபோக்குவலைப்பதிவு என தேர்வு பெற்றதை.மேலும் பல சாதிக்க வாழ்த்துகள்!

chinthamani said...

வாழ்த்துகள் சந்திரவதனா

Chandravathanaa said...

தகவலுக்கு மிகவும் நன்றி வவ்வால்