படம் : அன்பு எங்கே
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வேதா
எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே
உலகம் புகழுது ஏட்டிலே
அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு
ஆடிக்கொண்டே நுழைவதை
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா
சின்னையா நீ சொல்லையா
எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
அன்னமிட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள் - அந்த
அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே
முன்னவர் போல பெயரெடுத்து
முறையோடு வாழும்
முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும்
துணை புரிவேன் நானும்
எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
6 comments:
நன்றி. சந்திரவதனா,
வாழ்க்கை வாழ்வதற்கெ படத்தில் "நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான், படையுடனெ வந்தான்" நன்றாக இருக்குமே?
நீங்கள் ஆடியொ போடுவது இல்லியா?
வணக்கம் சந்திரவதனா.
மிகவும் அழகான பாடல். எழுத்திலே வரைந்ததற்கு நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி வள்ளி.
நான் இன்னும் ஓடியோ போடத் துவங்கவில்லை.
எதிர்காலத்தில் போடலாம்.
நீங்கள் கேட்ட பாடலைத் தர முயல்கிறேன்.
றெனிநிமல், சிந்தாமணி
நன்றி
சந்திரவதனா!
இந்த ஐரோப்பிய வாழ்வில் தெளிவாக நான் கண்ட விடயம். நிம்மதி பணத்தால் மட்டும் வருவதில்லை. " நான் வாழ்வதற்காக உழைக்கிறேனா???உழைப்பத்ற்காக வாழ்கிறேனா,???! இன்னும் புடிபடல!!நல்ல பாடல்
யோகன் பாரிஸ்
யோகன் பாரிஸ் சொல்வது
உண்மை.
நேரம் பாராமல் உழைக்கும் வர்க்கம்.நேரம் தெரியாமல் தூங்கும்
சில பேர்.
தூக்கமும் இல்லாமல்,பணமும் இல்லாமல் என்றும் கவலையோடு நம் அண்டை நில மக்கள்.
நியதியே மாறிவிட்டது.
வள்ளி, யோகன்
கருத்துக்களுக்கு நன்றி.
உழைப்பதற்காகவா வாழ்கிறோம் என்ற ஆதங்கம்
ஐரோப்பியாவுக்குப் புலம் பெயர்ந்த அனேகமான தமிழரிடம் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது.
புலத்தின் பொருளாதரச் சிக்கல் மட்டுமல்லாது இந்த முடித்து விட்டோம் என்னும் போது மீண்டும் ஊரில் இருந்து வரும் வேண்டுதல்கள் மீண்டும் மீண்டுமாய் எம்மை அந்த ஆதங்க நிலைக்கே தள்ளுகின்றன.
Post a Comment