17.5.06

துள்ளாத மனமும் துள்ளும்

படம் : கல்யாணப் பரிசு (1959)
பாடியவர் :
வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை :

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
இருளை மறைப்பதும் கீதம்

(துள்ளாத)

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்,
உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
உண்மை இன்பம் விளைந்திடும்

(துள்ளாத)

2 comments:

Pandian R said...

மிக அறுமையான பாடல். பாடியவர் ஜிக்கிதானே?

Chandravathanaa said...

நன்றி பாரதி