17.5.06

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

படம் : பதிபக்தி (1958)
பாடியவர் :
வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை :


வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே
தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு
சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று
அருமையான பருவம் கொண்டு
அன்புமீறி ஆடிப்பாட காணலாம் - பலர்
ஜோடியாக மாறினாலும் மாறலாம் - சிலர்
தாடிக்கார ஞானிபோலும் வாழலாம்
நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே
பல....விந்தையான வார்த்தை வீழும் காதிலே
விட்டுப்போனபோது அழுதவள்ளி
புதுமையான நிலையில் - அல்லி
பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் - தொட்டுத்

தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் - கண்ணில்
சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்

(வீடு)

2 comments:

வல்லிசிம்ஹன் said...

மறுபடியும் நல்ல நினைவுகளை எழுப்பி விட்டிர்கள் சந்திரவதனா. நன்றி.
உங்களுக்கு அன்பு எங்கே என்ற படத்தில் வந்த "எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலெ! --பி.சுசீலா பாடிய பாடல் தெரியுமா?

Chandravathanaa said...

நன்றி வள்ளி.பாடசாலைப் பருவத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்த பாடல் இது.


நீங்கள் கேட்ட பாடல் இங்கே