படம் : மதனமாளிகை
குரல் : ஜேசுதாஸ், P.சுசீலா
இசை : எம்.பி.ஸ்ரீனிவாசன்
நடிகர்கள் : சிவகுமார், அல்கா
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது - அதன்
இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..
(ஏரியிலே)
மாலையிலே வரும் மன்னனுக்கென்றே
மன்மத ஆராதனை - அந்த
மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது..
மங்கல நீராடுது..
ஆ..ஆ..
(ஏரியிலே)
பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
ஆனந்த ராகம் கேட்கட்டுமே
கண்படும்போதே கசங்கிய மேனி
கைபடும்போது என்னாகும் ?
காவலை மீறிப் போகிற வேளை
செவ்விதழ் மேலும் புண்ணாகும்
(ஏரியிலே)
பூரண கும்பம் ஏந்தி நடந்தால்
நூலிடை பாவம் வருந்தாதோ
காதலன் கைகள் தாங்கி நடந்தால்
பாரமும் கொஞ்சம் குறையாதோ
என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று
சோதனை போட்டால் ஆகாதோ
இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
மோகன மயக்கம் தீராதோ
(ஏரியிலே)
4 comments:
இந்தப் பாடல் எனக்கு பாடசாலை நாட்களில் மிகவும் பரிட்சயமானது. ஹாட்லிக்கல்லூரியில் இந்த பாடலுக்கு பெண் வேடம் போட்டு நடனமாடிய, எனக்கு மூத்த மாணவர் ஒருவர், ஒரு சில வக்கிர குணம் படைத்தவர்களால் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் தீண்டப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். உங்களுக்கும் இந்த சம்பவம் தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். இந்தப் பாடல் எனக்கு இந்த சம்பவத்தை ஞாபகம் ஊட்டியது. இங்கு இடுவது தவறாக இருந்தால் இந்த பின்னூட்டத்தை அகற்றி விடுங்கள்.
காரூரன்,
நீங்கள் குறிப்பிட்டது இந்த சம்பவத்தையா?
http://www.selvakumaran.de/index2/kathai/avel.html
ஆமாம், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் தான். இவர் மிகவும் திறமையாக பெண் வேடம் போட்டு நடிப்பார். சீதையாக நடித்திருக்கிறார். எனக்கு இந்த சம்பவம் பாடசாலை நாட்களில் வியப்பாக இருந்தது. மூத்த மாணவர்களுடன் பழகுவதற்கே ஒரு தயக்க உணர்வு இருந்தது. இப்படியாக சுபாவம் உள்ளவர்களுக்கு வாழ்க்கை ஒரு சோதனையாக இருந்துவிடுகின்றது. எனக்கு தெரிந்த உறவு ஒன்று பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு அனுமதி பெற்றும் மூத்த மாணவர்களின் சேட்டைகளை முன் கூட்டியே அறிந்திருந்ததால் பயந்து பல்கலைக்கழகம் போகவில்லை. ஆணுக்குள் பெண்ணின் குணங்களும், பெண்ணிற்குள் ஆணின் குணங்கள் இருப்பது இயற்கையே. ஆனால் எவ்வளவு வீதம் ஆணின் தன்மை, பெண்ணின் தன்மை என்பதே வேறு படுகின்றன.
யாழ் மத்திய கல்லூரியில் கிரிக்கெட் போட்டியில் இந்த பாட்டை முதன் முதலில் கேட்டென்
Post a Comment