படம் : வாழ்க்கைப்படகு
பாடியவர் : PB Srinivas
வரிகள் : கண்ணதாசன்
இசை : MSV
பாடல் ஒலி வடிவில்
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
(நேற்று)
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன ?
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன ?
பூமுகம் சிவந்தா போகும்
(நேற்று)
பாவை உன் முகதைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததது கனவோ என்று
வாடினேன் தனியாய் நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு
(நேற்று)
11 comments:
சந்திரா, தங்களுடம் "அறுவடை நாள்" பாடல்கள் உள்ளதா? mp3 எங்கு கிடைக்கும்?
சீனு,
அறுவடைநாள் பாடல்கள் கைவசம் இல்லை.
எங்கிருந்தாவது எடுத்துத் தர முடியுமா எனப் பார்க்கிறேன்.
இந்தப் பக்கத்தில் ஒரு பாடலைக் கேட்கலாம் - தேவனின் கோவில்
கானாபிரபா, மலைநாடான் போன்ற யாராவது தெரிந்தால் விபரம் தருவார்கள் என நம்புகிறேன்.
அக்கா, அந்த படப் பாடல்களை நான் பதிவிறக்கம் செய்து விட்டேன். esp, "தேவனின் கோவில்" (அதை கேட்டுக் கொண்டேதான் இந்த comment அடிச்சிட்டிருக்கேன்). இங்கே அனைத்து ராசாவின்ன் கானங்களும் கிடைக்கிறது.
ஓ இன்னொரு ராஜா ரசிகன் :-)
http://rajaecho.tripod.com/ சீனு சார் நன்றிங்க.....இளையராஜாவின் பாடலெல்லாம ஒரே வெப்சைட்டிலை கிடக்கு
ஹி...ஹி...Welcome-முங்கோவ்...
சின்னக்குட்டி, கானாபிரபா, சீனு
நன்றி.
யோகன்
தகவல்களுக்கு நன்றி.
நல்ல பாடல் சந்திரவதனா. மிகவும் நல்ல பாடல். எனக்கும் பிடித்த பாடல்.
நன்றி G.Ragavan
//உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன ?
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன ?
பூமுகம் சிவந்தா போகும்//
hmmmm...enna unarchi poorvamaana varigal Chandravadhana...Nandri
மிக்க நன்றி நண்பரே
Post a Comment