1.5.06

காகித ஓடம் கடல் அலை மீது

படம் : மறக்க முடியுமா ?
குரல் : சுசீலா
பாடல் : மு.கருணா நிதி
இசை : ராமமூர்த்தி


காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

(காகித)

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

(காகித)

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே

(காகித)

3 comments:

barathee|பாரதி said...

No Compromise.
மிகக் கனமான பாடல்
நன்றி

Bharaniru_balraj said...

இந்தப் பாடல் கலைஞர் கருணாநிதி எழுதியது. காலத்தால் அழிக்க முடியாத பாடல்.

Chandravathanaa said...

உண்மைதான் பாரதி. மிகவும் கனமான பாடல்.
பால்ராஜ் சொல்வது போல காலத்தால் அழியாத பாடலுங் கூட.