7.5.06

நிலவே நீ சாட்சி..

படம் : நிலவே நீ சாட்சி
குரல் : பி.சுசீலா
நடிகை : கே.ஆர்.விஜயா

நிலவே நீ சாட்சி..
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி..

( நிலவே )

அலையும் உறங்க முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன

( நிலவே )

ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு

( நிலவே )

கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை

( நிலவே )

3 comments:

G.Ragavan said...

மிகவும் அருமையான பாடல். மெல்லிசை மன்னரின் இசையில் இனிமையோ இனிமை. பிசுசீலாவின் குரலைப் பற்றிச் சொல்ல வேண்டுமா!

paarvai said...

இது கண்ணதாசன் பாடல் என நினைக்கிறேன்.
கண்கள் இரண்டும், குருடானால் இந்தக் காதற் கதைகள் பிறப்பதில்லை- என காதல் அழகையொட்டிப் பிறப்பதாக, எழுதியுள்ளார். ஆனால் " காதற் பெண்களின் பெரும் தலைவனாக இருந்த கவிஞர்"- அழகனல்ல!! அறிஞனே!
பெண்கள் தான் சொல்ல வேண்டும்.
யோகன்
பாரிஸ்

Chandravathanaa said...

ராகவன்
கருத்துக்கு நன்றி.

யோகன்
விழிகள் காதலுக்குரிய ஊடகங்களில் முக்கிய பங்கு வகித்தாலும் கண் இல்லாமல் காதல் இல்லையென்று சொல்ல முடியாது.
அதே போலத்தான் அழகும். அழகின் கவர்ச்சியில் ஈர்ப்பு உண்டானாலும் மனதின் இணைவில்தான் நியமான காதல் மலரும். இதை வாசித்துப் பாருங்கள்.