5.5.06

துயிலாத பெண் ஒன்று கண்டேன்

திரைப் படம்: மீண்ட சொர்க்கம்
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
இசை: டி.சலபதி ராவ்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, பத்மினி


http://www.raaga.com/getclip.asp?id=999999026780


ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாள சின்னம்

ராஜா:
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
நானா?

ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்

ராஜா:
உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
யாரோ?

ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மண மேடை தனில் மாலை சூடும்
உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்

ராஜா:
நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
ஓஹோ..

ராஜா:
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

5 comments:

தமிழ் குழந்தை said...

மிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.

நாகு said...

nice song

Chandravathanaa said...

நன்றி நாகு.
நன்றி தமிழ் குழந்தை

paarvai said...

அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாள சின்னம்
வித்தகக் கவியல்லவா,,,,!!!!;முத்தத்தை ,எவ்வளவு பக்குவமாக ஒரு பெண்ணைக் கொண்டு சொல்லியுள்ளார்;இசை;குரல் என எல்லாமே அளவாகக் கலந்த கூட்டு.இப்படியான பாடல்கள் இனி வருமா?மிக அருமையான இரசிப்பு உங்களுக்கு!!!! தொடரவும்.யோகன்
பாரிஸ்

Chandravathanaa said...

நன்றி யோகன்