4.5.06

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

படம் : காத்திருந்த கண்கள்
குரல் : பி.பி.ஸ்ரீனிவாஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை :
நடிகர்கள் : ஜெமினி, சாவித்திரி


வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?

காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா

8 comments:

barathee|பாரதி said...

அழிக்க முடியாத பாடல். சினிமா பாடல்களை ரசிக்கத்தெரியாத சிறுவயதிலேயே மனதில் பதிந்த பாடல். PBS, சுசீலா என்று இருவரின் பாடல் வரிசையில் விட்டுப்போக முடியாத 'நோ காம்பரமைஸ்' பாடல் :)

மிக்க நன்றி.

PUDUPPAALAM said...

மிக ஔஅருமையான பாடல். எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

=இஸ்மாயில் கனி
கும்பகோணம்

PUDUPPAALAM said...

மிக ஔஅருமையான பாடல். எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

=இஸ்மாயில் கனி
கும்பகோணம்

PUDUPPAALAM said...

இந்த வரிசையில் இன்னும் சில அருமையான பாடல்களின் தொடக்க வரி இதோ. இந்த பாடல்களையும் தங்கள் வலைப்பூவில் இட வேண்டுகிறேன்.

1) நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ...
2) துள்ளி திரிந்த பெண்ணொன்று
3) பால் வண்ணம் பருவம் கண்டேன்..
4) பார்த்தேன், சிரித்தேன், பக்கம் வர துடித்தேன்...

=இஸ்மாயில் கனி
கும்பகோணம்

Chandravathanaa said...

பாரதி, இஸ்மாயில்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நான் ரசிக்கும் பாடல்கள் உங்கள் ரசனைக்கும் விருந்தாகியதில் மகிழ்ச்சி.

இஸ்மாயில்,
நீங்கள் கேட்ட பாடல்களைத் தர முயல்கிறேன்.

Chandravathanaa said...

இஸ்மாயில்
நீங்கள் கேட்ட பாடல்களில் ஒன்றான நேற்று வரை நீயாரோ நான் யாரோ
இங்கே

ENNAR said...

இப்பாடலை எழுதியவன் மறந்துவிட்டான் ஏனடா கண்ணா
அவன் அதிகமாக எழுதிவிட்டதாலடா கண்ணா
இப்படிப் பட்ட பாடலை இனி நாம் கேட்க முடியமா கண்ணா
அவன் பாடலை நாம் கேட்டால் போதுமா மேலுகத்தானும் கேட்கத்தான் சென்றானடா
அங்கு அவனுக்க சோம பானம் சுரபாணம் கி்டைக்கமடா கண்ணா

Chandravathanaa said...

என்னார்
வரவுக்கு நன்றி.